Sunday, October 11, 2009

Movies Review: திரு திரு துரு துரு

உண்மையில் உன்னைப்போல் ஒருவன், திரு திரு துரு துருவின் கதாநாயகன் தான். நம்மைப்போல் கொஞ்சம் சோம்பேறி, கொஞ்சம் பொய்யன், ஓரளவு பிறருக்காக ஏதாவது செய்பவன்.

உருட்டுகட்டை, பட்டாபட்டி போட்ட குத்துப்பட்டு, அவனே இவனே என்று டைட்டில் பாட்டு எதுவும் இல்லாமல், இரண்டரை சொச்ச மணிநேரம் உட்கார்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார்கள். யாரும் அரிவாளைத தூக்கிக்கொண்டு "வெட்டுங்கடா" என்று அலையவில்லை. ஜீப் வெடித்து பறக்கவில்லை. கதாநாயகி ஓரளவுக்கு மூடியபடி வருகிறாள். கதாநாயகன் ஒண்டியாக பத்துபேருடன் சண்டை போடவில்லை. சண்டை வரும் நேரம், பயந்து ஓடுகிறான்; போலீஸ் அவனை காப்பற்றுகிறது.

தமிழ் சினிமாவிற்கு இப்படி பல முதல்கள். இயக்குனர் ஒரு பெண். மௌலி முதலானவர்களை வைத்து இன்னும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாம். பரவாயில்லை.

No comments: