முத்துக்குமரனை கப்பலின் மேல் தளத்தில், ஒரு பலகையில் நிறுத்தி சுட்டு விட்டார்கள். சனிக்கிழமை வந்த குமுதத்தில் வந்தது செய்தி. செவ்வாய்க்கிழமை, சுஜாதா தில்லைநகர் மகளிர் மன்றத்தில் பேசப்போகிறார். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஆனந்த குமார், ஸ்ரீகாந்த், பரத்வாஜ், சுஜாதாவை சந்திக்க முடிவு செய்து விட்டார்கள். Agenda: முத்துக்குமரனுக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்வது. முதலில் எனக்கு போக ஆசையாகத்தான் இருந்தது. ஐந்து நிமிட சந்திப்பு சுவாரஸ்யத்தை விட மிக அதிகமான சுவாரஸ்யம் படிக்கும் போது இருப்பதாலோ என்னவோ நான் அவரை சந்திக்கப் போகவில்லை. குறையொன்றுமில்லை. ஆனால் இப்போது, சுஜாதா இல்லை என்று நினைக்கும்போது, மிகப்பெரிதாக என்னவோ குறைகிறது.
எத்தனை பேருக்கு inspiration? அறிவியலுக்கும் உணர்வுக்கும் இடையே நடுவில் வாழ்ந்தவர். உணர்வுகளை சரியாகப்புரிந்துகொண்டு ஒரு பார்முலாவைக்கண்டுபிடித்து கதைகளும், திரைக்கதையும் வசனமும் எழுதியவர். தான் special என்று உணர்ந்தும், எல்லோரும் சமம் என்று நடந்து கொண்டவர்.
பல நாயகர்களைப்போல இவரையும் சமூகம் மறந்து விடக்கூடும். மறந்து விடுவோமோ? சந்தேகம் தான். புதுமைப்பித்தனையும், ஜானகிராமனையும் மறந்து விட்டோமா என்ன? மறந்தாலும் மறக்கவிட்டாலும் அவர் இல்லாதது குறை தான், குறை தான்.
On society, politics, religion, economics and many other topics that just do not matter.
Subscribe to:
Post Comments (Atom)
One law for all - Ignoring Subjectivity*
A recent incident in my apartment complex highlighted a concerning disparity: businessmen seem to operate under a different set of rules. Wh...
-
சில வரலாறு தொடர்பான புத்தகங்களை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தது. அதின் மூலம் வெகுஜனங்களைக் குறி வைத்து எழுதப்படும் வரலாறு பற்றி புரிந்தது. வ...
-
Anti-fragile எனும் ஆயிரங்காலத்துப் பயிர் தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனை...
-
அறிமுகம் இது கல்யாணத்தின் போது, குடை, கைத்தடி, கண் மை சகிதமாக மாமனார் பெண் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் போகும் யாத்திரை பற்றிய பதிவு அல்ல...
1 comment:
TRS, This is an interesting anecdote, you've posted. "Sujata" was a genius. Apart from his " Switchinaan"isms for which he was renowned for, he takes the cake for simplifying technology and breaking the aura of technology !!!!
Thanks for sharing and bringing memories of those days !!!!
Anand Kumar
Post a Comment