Tuesday, February 19, 2013

Violence and you

What can be more disturbing than the sight of a graphic violence?  How can the picture of a 14-year old chubby kid munching chocolate disturb me?  Believe me, it disturbed me and it would disturb you.   The kid was killed a few minutes later, shot point blank.  The information that the boy was killed and picture of him nonchalantly eating a piece of chocolate troubled me like anything.

I can't name the feeling, for naming it would be to run away from facing it.  The feeling stays there, like a bad food troubling your stomach.  Let it linger for a few minutes; this is real.  This feeling is real.  The information is just information, it is not my experience.  I can make believe that it my experience, I can feel like a boy facing guns.  I'd be as helpless as I'm right now.

Like the boy facing the gun, like the girl teased by a bunch of goons in a Delhi bus, I'm helpless.  You are helpless.  Let us not run away from this feeling.  Let's not wear the hat of a cold judge and lecture about strong punishments.  Nor do we wear the hat of a saint or a human rights activist and preach mercy.  That's running away from the reality - the reality that we are helpless.

Experience it, experience it fully.   Then, with a clear mind let's take to the action.  The action is driven by what you can.  At the very least, you as an individual, can start to respect life - not just human lives; you can respect women - not just a motherly woman, but can also respect someone that you'd have never respected in your so-called life.  You, as a parent can influence your children on these lines.  You may become the upholder of justice who wouldn't spare a culprit even if they are the kith and kin, you may become a saint who can forgive the worst offender  - these are all possibilities.

What is real is what you experience, here and now.

Sunday, February 10, 2013

நட்பு

வக்கீல் என்னை பார்க்க வந்திருக்கிறார் என்று காவலர் சொன்னார்.  புரிந்துவிட்டது.  இன்னும் 2-3 நாட்களோ, அதிக பட்சம் ஒரு வாரமோ தான். குழப்பத்திலிருந்து விடுதலை.  சாவு நிச்சயம் என்று எல்லாருக்கும் தெரியும்.  எதோ ஒரு கனவில் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  என் நிலைமை கொஞ்சம் மாறுபட்டது.  அடுத்த வாரம் வந்தாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு தினமும் கொல்லும்.  தினச்சாவுக்கு பதிலாக ஒரு சாவு.  அதுவரை வாழ்வு!  நிம்மதி தான்.

நான் தூக்கில் இடப்பட்டால் நாடு கொந்தளிக்கும் என்று பயப்பட்டார்களாம்.  இப்போது யாரோ ஒரு புண்யவானுக்கு தைரியம் வந்து என்னை தூக்கிலிட உத்தரவிட்டிருக்கிறார்.  நன்றி ஐயா. அவருக்கு உண்மையில் தைரியம் வந்தததா அல்லது எதாவது அரசியல் கணக்கில் என் உயிரின் மதிப்பு பூச்சியமாக ஆனதா தெரியவில்லை.   

எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று மக்கள் கொந்தளிப்பார்களாம்.  அவர்களுக்கு நடக்கும் அநியாயம் பற்றி கவலை இல்லை போலும்.  அவர்கள் குழந்தைகளுக்கு நல்ல  கல்வி கிடைக்கவில்லை, தரமான உணவு கிடைப்பதில்லை, கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் அளிப்பதில்லை என்று எதுவுமே அவர்களுக்கு அநியாயமாக தெரிவதில்லை.  நல்ல மக்கள், அவர்களுக்கு நல்ல நல்ல தலைவர்கள். 

இவர்களைப்பற்றி எனக்கு என்ன கவலை.  என் கவலை என் மனைவி, குழந்தை பற்றியது தான்.  என் மகனும் என்னைப்போல வாழ்க்கையை தொலைத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று கவலை.  என் மனைவியும் என் அம்மா போல, போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்து நோகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை தான்.

தலைவன், கொள்கை, மதம், நியாயம், அநியாயம், நட்பு இவை எல்லாம் அர்த்தம் அற்றவை என்று உணர்கிறேன்.   இவை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டதை யார் அறிவார்.  மருத்துவம் படிக்க இருந்த என்னை, திசை மாற்றிய நட்பு, நான் வாழ வேண்டிய வாழ்க்கையை ஒரு தலைவனும், மதமும் இயக்க வீணடித்த நாட்கள்.   

அமைதியை விரும்பி சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாலும் முடியாத குழப்பங்கள், கூடா நட்பு, கூடா பகை, துரத்தி துரத்தி இப்போது திகாரில்.  இனிமேல் ஓட வேண்டாம், துரத்த வேண்டாம், கெஞ்ச வேண்டாம், லஞ்சம் கொடுக்க வேண்டாம், பொய் சொல்ல வேண்டாம், உண்மையும் சொல்ல வேண்டாம். நீண்ட நிம்மதியான தூக்கம் தான்.

சில நேரங்களில் நட்பு கொடுக்கும் தண்டனை எதிரி கொடுக்கும் தண்டனையை விட கொடூரமானதாக இருக்கிறது.  நான் அன்று துப்பாக்கி தூக்கவில்லை, வெடி குண்டு வீசவில்லை.  துப்பாக்கி எடுத்தவர்கள் துப்பாக்கியால் செத்தார்கள், குண்டு வீசியவர்கள் குண்டால் செத்தார்கள்.  நான் இரண்டும் செய்ய வில்லை, அன்று சாக வில்லை. அதன்பின் தினமும் செத்துக்கொண்டிருக்கிறேன்.  போலீஸ் பிடித்தபின், நான் சொன்னது சில, போலீஸ் சொல்ல வைத்தது சில.  போலீஸ் அடி சில நேரங்களில் தலைவர் சொன்ன சொர்க்கத்தை நினைவு படுத்தியது.  சந்தர்ப்ப சாட்சியங்கள் எனக்கு எதிராகி விட்டன.  

அதன்பின் நீதி மன்றங்கள், வக்கீல்கள், தீர்ப்புகள், மனுக்கள் என்று பத்து வருடம் ஓடிவிட்டது.  இரண்டு மூன்று முறை மனைவி குழந்தையைப் பார்த்தேன், என்னால் அவர்களுக்கு எத்தனை கஷ்டம்.  முடிந்தால் அவர்களைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்.  இன்னும் எத்தனை எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்பேன் என்று தெரிய வில்லை... 

கல்லூரிக்குப் போகாமல், ஓடிப்போனதர்க்கு அம்மா அப்பாவிடம் மன்னிப்பு, நெடு நாள் நட்பை ஒதுக்கியதற்கு மன்னிப்பு, சண்டைகளில் கொலைகளில் பங்கு கொண்டதற்கு மன்னிப்பு,கொள்கையில் உறுதியாக இல்லாமல் குழுவில் இருந்து வெளியே வந்ததற்கு மன்னிப்பு, கூடா நட்பிற்கு மன்னிப்பு ....

"ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டார்..." 

எதிர்பார்த்ததுதான்.  வரிசையில் நான் இரண்டாவதாக இருந்தேன்.  இப்போது முதல்.

"என்று?"

"நாளை மறுநாள்"

மனைவி குழந்தையை நிச்சயம் பார்க்க முடியாது.  மேலே பேச ஒன்றும் இல்லை.  எழுந்து செல்லுக்குள் சென்று விட்டேன்.

அடுத்த நாள் சிறையின் சடங்குகளில் கழிந்தது.

அடுத்த நாள் நான் மூன்று மணிக்கு எழுப்பப்பட்டேன்.  கடன்களை முடித்து, தூக்கு மேடயில் ஏறும்போது பக்கத்தில் காவலர்.  சட்டையில் பெயர் - ரவீந்திர சிங். 

மூன்றாம் வகுப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ரவீந்திர ஷர்மா ஏனோ நினைவிற்கு வந்தான். 

 

Sunday, December 02, 2012

பிரார்த்தனை

 "அம்மா சொன்னான்னு   சமயபுரத்துக்கு நான் போய் உருவாரம் போட்டுட்டு வந்தேன்.  நீங்க ஒரு நடை வேளாங்கண்ணி போய்  வேண்டிண்டு வந்துருங்கோ."
"நாளைக்கு மத்யானம் பசங்கள கூட்டிண்டு போறேன்.  ஆனா எப்டி, என்ன வேண்டிக்கரதுன்னு தெரியல."
"ஏன்? சமயபுரத்துல வேண்டிக்கராப்ல வேண்ட வேண்டியதுதான்."
"அதுக்கில்ல - அந்த கோவில் வழக்கம் என்னான்னு தெரியாதே"
"அங்க யார்கிட்டயாவது கேட்டா சொல்லிட்டு போறா."

அத்தைக்கு சில நாட்களாக உடம்பு சரியில்லை.  நன்றாக இருப்பார், திடீரென்று மயக்கம் வந்து  விழுந்து விடுவார்.  நாங்கள் திருச்சியில் பாட்டி வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது, அத்தையின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருந்தது.  இரண்டு நாள் நினைவே இல்லை.  தாத்தா டாக்டர், இந்த விஷயங்களுக்கு அவர் கடவுளை இழுப்பதில்லை.  கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று விட்டு விடுவார்.  ரிட்டையர் ஆனபின், அவருக்கு என்னையும் மற்ற பேரக்குழந்தைகளையும் மேய்க்கவே சரியாக இருந்தது.  அத்தையின் சிகிச்சைக்கு அவர் நம்பியது கடவுளை விட, விஸ்வநாதம் பிள்ளையின் பிள்ளைகளையே.

பாட்டிக்குதான் கவலை - அவள் பாஷையில் விசாரம்.  தையல் நாயகியும், மாரியம்மாவும் எல்லா டாக்டரை விடவும் நம்பிக்கையானவர்கள்.  அந்த லிஸ்டில் சமீபத்திய சேர்க்கை - வேளாங்கண்ணி மேரி. ரொம்ப ஆச்சாரமான  குடும்பம் இல்லைதான்.   சராசரி இந்தியக் குடும்பம் போல, மதம் என்பது பற்றி யோசிக்காத குடும்பம் அது.  காலமும் அப்படிப்பட்டது.  சித்தப்பாவிற்கு நாகப்பட்டினம் மாற்றல் ஆன பின் நாகூர் ஹஜ்ரத் சாகுல் ஹமீதும், வேளாங்கண்ணி மாதாவும் மிக சுலபமாக சேர்த்துக்கொள்ளப் பட்டனர்.  சித்தி உதவிக்கு திருச்சி வந்த போது, வேண்டுதலை சொல்லிவிட்டார் பாட்டி.

யார் நாகை வந்தாலும், ஒரு கடமை தவறாத உபசரிப்பாக, சித்தப்பா அவர்களை சிக்கல், எட்டுக்குடி எண்கண், நாகூர் மற்றும் வேளாங்கன்னிக்கு அழைத்துச் செல்ல மறப்பதில்லை.  எல்லா இடங்களிலும் பெரிதாக ஒன்றும் வழிபட மாட்டார்.  அர்ச்சனை கூட செய்ய மாட்டார்.  அதனால் இந்து கோவில்களில்கூட சடங்குகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரிந்திருக்காது.  தவிர அவர் கொஞ்சம் கம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன்.  பேங்க் வாசலில் நின்று கொடி பிடித்து, கோஷம் எல்லாம் போட்டிருக்கிறார்.  அவரைப்போய் வேளாங்கன்னியில் நேர்த்திக்கடன் செய்யச்சொன்னால் கொஞ்சம் குழம்பிவிட்டார்.  இருந்தாலும் அம்மாவின் ஆணை, அக்காவின் உடல் நிலை ஆகியவற்றுக்காக  வேளாங்கன்னி போக தயாராகி விட்டார்.

நான், சித்தப்பா, அவர் பிள்ளைகள் மற்றும் சில குழந்தைகள் என ஒரு ஐந்து பேரை சேர்த்துக் கொண்டு நாலு மணி பஸ்ஸில் ஏறினோம்.  வேளாங்கன்னியில் மெழுகு வர்த்தியைத் தவிர எதுவும் ஞாபகம் இல்லை.  ஆலயத்தில் சித்தப்பாவின் தயக்கத்தைப் பார்த்த ஒரு வெள்ளாடை ஊழியர் எங்கள் பக்கம் வந்தார்.

"என்ன தேடறீங்க?"
"எங்க அக்காவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.  அவங்களுக்காக வேண்டிக்க வந்தோம்.  இங்க சடங்கு என்னன்னு தெரியல.  அதான்..."
"ஒண்ணும் பெரிய சடங்கு இல்ல.  உங்க அக்காவுக்கு உடம்பு குணமாகனும்னு மனசுல வேண்டிக்குங்க.  உடம்பு குணமானதும் இங்க வந்து ஒரு மெழுகுவத்தி ஏத்துங்க.  அவ்வளவு தான்."

ஊழியருக்கு மேரி மாதாவின் மேல் நிறைய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.  தயங்காமல் பேசினார்.

"இல்ல.  வேண்டிக்கிட்டு உடனே வேண்டுதல நிறைவேத்ததான் எங்க அம்மா சொன்னாங்க."

எங்களை கோவிலுக்குள்ளே இருக்க சொல்லிவிட்டு மெழுகு வர்த்தி வாங்க சித்தப்பா வெளியே போனார்.