Saturday, July 28, 2012

ப்லசீபோ (மருந்தற்ற குளிகை)

நன்றி:  ஜெயமோகன், துக்ளக் சத்யா 

"உட்காருங்க... என்ன பிரச்சினை?"
"இவருக்கு தாங்க.  கொஞ்ச நாளா எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாரு, ரெஸ்ட் லெஸ்ஸா இருக்காரு."
"என்ன வயசு"
"இருவத்தெட்டு டாக்டர் "
"எதுக்கெல்லாம் கோபப்படுறாரு?"
"பேப்பர் காரன், பால் காரன்  லேட்டா வந்தா, அஜீர்ணம்னா, எதுக்கெடுத்தாலும்..."
"என்ன வேலை?'
"கம்ப்யூட்டர்ல, அடுத்த வாரம் அமேரிக்கா வேற போகணும்."
"அனேகமா ஒர்க் ப்ரெஷர் தான் காரணம்... வேற வேலை பாக்க முடியுமா?"
"முடியாது டாக்டர்... கம்ப்யூட்டர்  தவிர வேற எதுவும் தெரியாது."
"ஹாபி ஏதாவது? ஸ்டாம்ப், காயின் சேக்கறது செய்வாரா?"
"கவிதை கட்டுரையெல்லாம் எழுதுவாருங்க... கல்யாணத்துக்கு முன்னாடி.  இப்ப எதுக்கும் டைம் இல்ல"
"நல்லா தூங்கறதுக்கு மாத்திரை தரேன்.  ஆனா அது மட்டும் போதாது.  எரிச்சல் தர எல்லாத்துக்கும் ஒரு ஆறுதல் அல்லது காரணம் தெரியற வரைக்கும் திரும்பி இந்த பிரச்சினை வரும்.  கொஞ்சம் டைம் குடுங்க; ரெண்டு நாள் கழிச்சு கால் பண்ணுங்க, இல்ல முடிஞ்சா நீங்க மட்டும் வந்தா கூட போதும்..."

இரண்டு நாட்களுக்குப்பின்:
"இன்டர்நெட்டுல எல்லாம் தேடி பாத்துட்டேன்மா... ஒரு நல்ல மருந்து கிடைச்சிருக்கு.  நீங்க பிராமினா?"
"இல்ல  டாக்டர்.  ஏதாவது டயட் மாத்தணுமா? நாங்க வாரத்துக்கு அஞ்சாறு நாள் சைவம் தான்.."
"நல்லது.  எப்பல்லாம் பிரச்சினை வராப்ல இருக்கோ, அப்ப பிரச்சினைக்கு காரணம் பார்ப்பன சதின்னு சொல்லிடுங்க."
"...?"
"கொஞ்சம் யோசிச்சா அவங்க தான் காரணம்னு ப்ரூவ் பண்ணிடலாம்;  ஆனா யோசிக்க வேண்டியதே இல்ல...ஏன்னு கேள்வி, ஏதாவது ஒரு பதில் இருந்தாலே போதும். பிரச்சினை இருக்கறதே மறந்து போய்டும்."
"ஆனா நிறைய பிராமின் ப்ரெண்ட்ஸ்  இருக்காங்களே?  அவங்க தப்பா நெனைச்சுக்க மாட்டாங்களா?"
"மாட்டங்க.. ரொம்ப கேட்டாங்கன்னா ராமானுஜர் சொன்னார், சங்கராச்சாரியார் சொன்னார்னா போதும். அவங்களே ஒத்துப்பாங்க..."
"எத்தனை நாளுக்கு டாக்டர்?"
"தேவைப்பட்டா ஆயுள் முழுக்க.  டயபடீஸ், பிரஷர்னா மாத்திரை லைப் லாங் சாப்பிடறதில்லையா?  அது மாதிரிதான்..."
"மாத்திரை மாதிரின்னு சொல்றீங்க,  சைடு எபெக்ட் இருக்காதா?"
"அதையும் யோசிச்சிட்டேன்.  நான் பிராமிந்தான்.  சைடு எபெக்ட் ஏதாவது பிரச்சினை வந்தா, நாந்தான் காரணம்.  பார்ப்பன சதி. எப்படி என் ஐடியா?"

No comments:

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in fo...