Saturday, August 03, 2024

தேங்கிவிட்ட தமிழ் - Idiom

மொழிபெயர்க்கும் போது, நவீன உலகத்தின் பல கூறுகளுக்கு தமிழில் சரியான சொற்களோ, உவமைகள் அல்லது மொழிமரபுகளோ (Idiom) உருவாகவில்லை.  இந்தக் குறை பிற இந்திய மொழிகளிலும் இருக்கலாம்.  

கடந்த சில நூற்றாண்டுகளாக உலகெங்கும் சமூகங்களில் எழுந்த முக்கிய மாற்றம் - நிறுவனங்கள்.  வணிக நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் என்று உருவானவை, ஆங்கிலத்தில் பல புதிய மொழிமரபை உருவாக்கியுள்ளன.  சில எடுத்துக்காட்டுகள் - hierarchy, top-down approach, grassroot.  இவற்றைத் மொழிபெயர்க்கும் போது, எளிய சிறு சொற்கள் இல்லாததால், ஆங்கிலத்தில் இவை தரும் பொருளின் தாக்கம் தமிழில் இருப்பதில்லை.

உதாரணத்திற்கு - Grassroot.  சமஸ்கிருத மூலத்திலிருந்து வங்காளத்தில் திருணாமூல் என்ற எளிய மொழிபெயர்ப்பு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருளைத் தந்துவிடுகிறது.   தமிழில் இதற்கு இணையான 'அடிமட்ட' என்ற சொல்லில் அந்த வீச்சு இல்லை. 'திரணம்' என்ற சமஸ்கிருத மூலச் சொல்லை எங்கே கேட்டிருக்கிறோம்?  பாரதியின் புதிய ருஷ்யாவில்.

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் 

...

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி

சரண் இன்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னைத்

திரணம் எனக் கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம்

அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில்

ஒரு வேளை பாரதி நூறாண்டுகள் வாழ்ந்திருந்திருந்தால், தமிழில் புதிய சொற்கள் பல வந்திருக்கலாம். அதை விட, திராவிடக் கட்சிகள் மட்டும் தமிழைக் கூறு போடாதிருந்தால், சமஸ்கிருதத்திலிருந்து பல எளிய சொற்களை இறக்குமதி செய்திருக்கலாம்.

No comments:

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in fo...