Sunday, August 21, 2022

திராவிடமும் வடிவேலுவின் கிணறும்

 சில வருடங்களாக மொழிபெயர்ப்பில் இறங்கியுள்ளதால் நண்பர் ஒருவர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

“’Money laundering’ என்பதற்கு தமிழில் பெரும்பாலும் பண மோசடி என்றே மொழிபெயர்க்கின்றனர்.  இதை மோசடி என்று சொல்ல முடியாது; சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சட்டபூர்வ பணமாகக் காட்டுவது தான் ’Money laundering’.   இதற்கு இணையான செயல்கள் தான் திராவிடக் கட்சிக்காரக்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நம்ப வைப்பது; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைப்பது போன்றவை.  இவை எல்லாவற்றிற்கும் பொறுத்தமாக தமிழில் என்ன சொல்/உவமை இருக்கிறது? இவற்றிற்கு சரியான தமிழ்ப்பதம் இருக்கிறதா?” 

சில நிமிடம் யோசித்துவிட்டு  - ”வடிவேலு, கவுண்டமணி, செந்தில், விவேக் டயலாக் கிடைத்தால் கூட பரவாயில்லை.  உதாரணத்திற்கு, "ஸ்டிக்கர் ஒட்டுவது" - நன்றாக உள்ளது; ஆனால் பொய்யை உண்மையாக்கும் செயலை அது சுட்டவில்ல” என்றார்.

இயல்பிலிருந்து தமிழ் நாடு எவ்வளவு விலகியுள்ளது என்பதற்கு இது அத்தாட்சி.  அன்றாட வாழ்வில் காணும் விஷயங்களை உவமைகளாக, பழமொழிகளாகக் கூறுவது வழக்கம்.  பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன, கிவாஜ பதினான்கு புத்தகங்களில் பழமொழிகளைத் தொகுத்துள்ளார்.  ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் புதிதாக சேர்த்த உவமைகள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.  ஐம்பது ஆண்டுகள் ஒன்றும் சொற்பமில்லை.  ஆங்கிலத்தைல் கார்ப்பரேட் வழக்கில் நூற்றுக்கணக்கான உவமைகள் வந்துள்ளன.  இவற்றில் சில தமிழிலும் உண்டு; ஆனால் பேச்சு வழக்கில் பல உவமைகள் மறைந்துவிட்டன.

இப்போது தமிழ் வழக்கில் உள்ள கொஞ்சநஞ்ச உவமைகளுக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை வசனங்கள் தான் ஆதாரம்.  இரண்டு தமிழர்கள் *தமிழில்* பேசிக்கொண்டால் வடிவேலு/விவேக்/கவுண்டமணியின் வசனங்கள் இடம் பெறாத உரையாடல்கள் இருக்க முடியாது.  சமூக ஊடகங்களில் மீம்கள் இவற்றை இன்னும் ஆழமாகப் பதிய வைக்கின்றன.

நண்பரின் கேள்விக்குப் பதிலாக வடிவேலு என்சைக்ளோப்பீடியாவைத் தேடியதில் கிடைத்த ஒன்று:


இது பொருந்தாது என்று நண்பர் நிராகரித்து விட்டார். இருந்தாலும் என்னால் அப்படி இருக்க முடியாது.  முடிந்தவரை இந்தக் காட்சியை திராவிடப் புரட்டல்களுடன் ஒப்பிட முனைந்துள்ளேன்.

வடிவேலு கொஞ்சம் அப்பிடி-இப்பிடி ஆசாமி, ஈவேரா போல.  அவருக்கு ஒரு கிணறு வெட்ட வேண்டும்; ஈவேராவுக்கு செல்வாக்கை மீட்க வேண்டியது போல. வெள்ளைக்காரனுக்கு கொஞ்சம் அனுசரித்துப் போய், கால்ட்வெல்லின் பழைய திராவிட சர்டிபிகேட்டை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.  அப்படி வெட்டியது தான் திராவிடம் என்னும் வடிவேலுவின் கிணறு.

கிணறு வெட்டியதாக சர்ட்டிபிகேட் யுனெஸ்கோ மன்றத்தில் வாங்கியது யுனெஸ்கோ விருது என்னும் வடிவேலுவின் கிணறு.

சர்க்காரியா கமிஷன் முழுதும்  வடிவேலுவின் கிணறுகள் நிறைந்துள்ளன. பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா,  உண்ணாவிரதம் இருந்து இலங்கைப் பிரச்சினையை தீர்த்தது, புதிய சட்டசபை திறப்பு விழா என பல வடிவேலுவின் கிணறுகளே.




No comments:

Earlier Posts