"பல தெய்வங்கள் உண்டு; அவர்கள் பல உருவங்களை ஏற்பது உண்டு; அவர்கள் மனிதர்களாக இறங்கி வருவதும் உண்டு; அவர்களை நீங்கள் உங்களுக்கு ஏற்ற வழியில் வழிபடமுடியும். உங்கள் தெய்வமும் அதன் வழிபாடும் காலத்திற்கேற்ப மாறும். உங்களுடைய நடத்தையும் அதன் பலனும் உங்கள் கையில். நீங்கள் வேண்டினாலொழிய, தெய்வங்கள் அவற்றில் தலையிடுவதில்லை." இந்த நம்பிக்கை கொண்டவர்கள் சனாதனிகள்.
ஹிந்துக்கள் இந்த நம்பிக்கைக்கு உட்பட்டவர்கள். எனினும் இன்று இந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும், என்றேனும் ஒரு நாள் இந்த நம்பிக்கையை ஏற்கும் சுதந்திரம் உள்ளவர்கள் ஹிந்துக்கள்.
இந்த சுதந்திரம் இல்லாதவர்கள் ஹிந்துக்கள் அல்லர். சுதந்திரம் இருப்பதாக பொய்யாகக் காட்டிக்கொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் உரிமை பெற்ற மதத்தினர் (அல் தகியா), சட்டபூர்வமாக அந்த மதத்திலிருந்து வெளி வரும் வரை, அவர்களை எப்படியும் ஹிந்துக்களாகக் கருத முடியாது.
வாழ்வின் குறிக்கோள் விடுதலை - முக்கியமாக மனத்திலிருந்து விடுதலை (விடுதலை பெற்று இறைவனுடன் ஐக்கியமாவது). அதை எட்ட, பல படி நிலைகளும், பிறப்புகளும் வழிகளும் உண்டு. இது தனது மதத்தின் குறிக்கோள் அல்ல என்பவன் ஹிந்து அல்லன்.
No comments:
Post a Comment