வீட்டில் கெளதம் மேனன் படங்கள் பார்ப்பதில் ஒரு சௌகரியம் - சேனல் மாற்றலாம், ஓட விட்டு முடிவை மட்டும் பார்க்கலாம். மொத்தத்தில் எனக்கு கெளதம் மேனன் படங்கள் பிடிப்பதில்லை என்பது தான் உண்மை. ஏன் என்று நண்பன் கேட்டான். உட்கார்ந்து யோசித்தேன்.
கெளதம் மேனன் படங்களுக்கும் மணி ரத்தினத்தின் படங்களும் கிட்டத்தட்ட ஒரே ஸ்டைலில் இருப்பது போல் தோன்றுகிறது. இருந்தாலும், கெளதம் மேனன் படங்களை வெறுக்கும் அளவிற்கு மணியின் படங்களை வெறுப்பதில்லை. காரணம் இதுதான்.
இரண்டு பேரின் படங்களில் இருக்கும் பொது இழை - சாதாரண மனிதர்களின் அசாதாரண தருணங்கள்.
இரண்டு பேரின் படங்களிலும் முக்கிய கதா பாத்திரங்கள் கொஞ்சம் ஹாலிவுட் வாசம் அடிப்பார்கள். கிளின்ட் ஈஸ்ட்வுட் போல அதிகம் பேச மாட்டார்கள், மிக புத்திசாலிகள் - ஆனால் சூப்பர் மென் இல்லை. அவர்கள் சாதாரணர்கள் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை. இதனாலே ஒரு ஒட்டாத நிலை இருக்கும். ஆனால் மணியின் படங்களில் சுற்றங்கள் இதை பெரும்பாலும் மறைத்துவிடும். நாயகனில் டெல்லி கணேஷ், ஜனகராஜ் கதாபாத்திரங்கள், ரோஜாவில் பாட்டிகள், அலை பாயுதேவில் பிரமிட் நடராசன், பல படங்களில் குறுக்கே ஓடும் குழந்தைகள் என்று நம் கவனம் திசை திரும்பிவிடும்.
கெளதம் மேனோனின் படங்களில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் இல்லாததால், you are stuck with boring protagonists. அவர்கள் பெரும்பாலும் ஒண்டியாக இருப்பார்கள். தனியாக இருப்பவர்கள் மிக சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்கு மேல், ஒரு தாங்க முடியாத கொடூரம் - கை, கால், தலை குறைந்த பட்சம் விரல் என்று எதையாவது வெட்டுவார்கள். (விண்ணைத்தாண்டி வருவாயா-வில் சிம்பு அடக்கி வாசித்ததன் காரணம் புரிகிறது.)
நம் இயக்குனர்கள் கதைகளை மட்டும் படி எடுத்து லோக்கல் கதாபாத்திரங்களை சேர்ப்பார்கள். கெளதம் மேனனோ கதை, கதாபாத்திரங்கள், களம் எல்லாவற்றையும் படி எடுத்து தமிழ்ப்படங்களை அடுத்த லெவெலுக்கு எடுத்துச்செல்வதாக பேட்டி கொடுப்பார்.
ஆகையால்,...
On society, politics, religion, economics and many other topics that just do not matter.
Subscribe to:
Post Comments (Atom)
Guilt, Fear and their effects
A senior gentleman passed away early this morning near my place. Nothing unusual about elderly people passing away. His son was away in fo...
-
Tired of being called to interview fresh graduates who can't think, I gave our HR person three sets of questions as follows. I didn...
-
"Is there a thing that doesn't exist?" was the question my son Krishna asked me last night. It has been his habit to listen t...
-
Anti-fragile எனும் ஆயிரங்காலத்துப் பயிர் தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனை...
1 comment:
Partially agree. I am not a big fan of Gowtham's movies either, however what I see in him is a director who likes to tell story. There are only a few directors (K Bhagyaraj is the master in recent times) who knows the knack of story telling. Most of our directors are stuck with a story (or they think they have one) and they fail in narrating them hence the disconnect with the audience. Gowtham's approach is new but you get bored because his heroes are the same, they speak "inglees" and possess the same qualities regardless of the character they play.
Post a Comment