புண்ய க்ஷேத்ரே காசி க்ஷேத்ரே
By Marcin Białek - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=1464739 6 வாராணசி எனப்படும் காசி ஆன்மீக பூமி. தெய்வங்களின் சைதன்யம் காசியில் நிரம்பியுள்ளது. அதனால் தான், காசி மக்களை ஈர்க்கிறது. சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் மிகச்சில நகரங்களில் காசியும் ஒன்று. ஒரு பெரும் ஆலமரம் போல, உயிருள்ள ஜீவனாக உள்ளது காசி. அதை பகுத்துப்பார்க்கும் மனத்தால் புரிந்து கொள்வது சுலபமல்ல. பல்வேறு தகவல்களை எப்படியோ சேமித்து வைத்திருக்கும் unconscious மனதுக்கு இணையானது வாராணசி. இது ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு முழுமையான பதிலேதும் காசியில் கிடைப்பதில்லை. பல்லாயிரம் கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அலுத்து கேள்வியும் அடங்கிப் போவது தான் காசியின் சிறப்பு. காசியில் இருக்கும் வரை கடந்த காலத்தின் சுமைகள் இருப்பதில்லை. வருங்காலத்தின் பயமும் இருப்பதில்லை. அங்கு வரும் யாத்ரீகர்கள் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு காசி அளிக்கும் அனுபவத்தைப் பெறுகின்றனர். காசியில் செய்ய வேண்டிய கடமைகளும், தரிசிக்க வேண...