தரிசனம்
"வாங்க..." என்றார் குருஜி. நான் அவரை சந்திக்கும் முதல் முறை. குருஜியை எனக்கு பதினைந்து வருடங்களாகத் தெரியும். ஆனால் நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை. அவர் குரலைக் கூட அவர் நண்பர் டேப்பில் பதிந்திருந்ததைத் தான் கேட்டிருக்கிறேன். நேரில் பார்க்க வேண்டிய தேவையும் இருந்ததில்லை. இப்போதும் அவரைப்போய் பார்க்கத் தேவை இல்லை தான். ஆனால் எனக்கே உரிய காரணம் இல்லாத செய்கையை காரணமாகச் சொல்லலாம். குருஜியை பார்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அவர் ஆசிரமம் ஊருக்கு வெளியே, ஒரு பொட்டலில் இருக்கிறது. சில வருடங்களாக, அவர் அங்கு வந்ததில் இருந்து, கொஞ்சம் பசுமை கண்ணில் படுகிறது. ஆசிரமம் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட மதத்திற்கு தேவையான எல்லா லட்சணங்களுடன் இருக்கும். பரவச பக்தர்கள், கடமையாக பிரச்சாரம் செய்யும் பிரச்சாரகர்கள், கறார் அதிகாரிகள், ஞானிகள் என்று பல வித மனிதர்களையும் அங்கு பார்க்கலாம். அதற்கு மேல், முதிர்ச்சி இல்லாத தினசரி அலுவல்கள், முதிர விடா மாற்றங்கள், அதை செய்யும் வித குழப்பங்கள் என்று வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சங்களும் அ...