Posts

Showing posts with the label translate / transliterate

தேங்கிவிட்ட தமிழ் - உவமைகளும் நகரவாசிகளும்

Anti-fragile  எனும் ஆயிரங்காலத்துப் பயிர் தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் நேரம் சென்றது.  நண்பருக்கு என்னுடைய பழைய கட்டுரைகளில் ஒன்றை அனுப்பத் தேடியபோது நான் நாஸிம் நிக்கலஸ் தாலேபின் Anti-fragile என்பதை விளக்க முயன்ற கட்டுரை கண்ணில் பட்டது.  குழந்தைத்தனமாக சுற்றி சுற்றி  விளக்கியிருந்தேன்.  எழுதிய எனக்கே அது புரியவில்லை. ஆங்கிலத்திலேயே Anti-fragile என்பதை விளக்க ஒரு புத்தகமே தேவைப்பட்டிருக்கிறது.  ஆனால், சிக்கலான இந்திய சமூகங்களே Anti-fragile.  ஆனால் அவை அதை எப்படிப் புரிந்து கொண்டுள்ளன? நாம் உவமைகளைக் கொண்டு சிக்கலானவற்றைப் புரிந்து கொள்கிறோம்.  அந்த உவமைகளும் பெருமளவு இயற்கையுடன் ஒன்றியவை.  தாவரங்கள், விலங்குகள், இயற்கை அமைப்புகள் கொடுத்த உவமைகளைக் கொண்டு சமூக பொருளாதார கருத்தியல்களைப் புரிந்து கொள்வது நமக்கு எளிது; அதுவே வழக்கம் கூட.  வரம்பின்றி வரிகளின் மூலம் மக்களை வதைக்கும் அரசுக்கு  'யானை புக்க புலத்தை' உவமையாகக் கூறினர். அப்படி இருக...

தேங்கிவிட்ட தமிழ் - Idiom

மொழிபெயர்க்கும் போது, நவீன உலகத்தின் பல கூறுகளுக்கு தமிழில் சரியான சொற்களோ, உவமைகள் அல்லது மொழிமரபுகளோ (Idiom) உருவாகவில்லை.  இந்தக் குறை பிற இந்திய மொழிகளிலும் இருக்கலாம்.   கடந்த சில நூற்றாண்டுகளாக உலகெங்கும் சமூகங்களில் எழுந்த முக்கிய மாற்றம் - நிறுவனங்கள்.  வணிக நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் என்று உருவானவை, ஆங்கிலத்தில் பல புதிய மொழிமரபை உருவாக்கியுள்ளன.  சில எடுத்துக்காட்டுகள் - hierarchy, top-down approach, grassroot.  இவற்றைத் மொழிபெயர்க்கும் போது, எளிய சிறு சொற்கள் இல்லாததால், ஆங்கிலத்தில் இவை தரும் பொருளின் தாக்கம் தமிழில் இருப்பதில்லை. உதாரணத்திற்கு - Grassroot.  சமஸ்கிருத மூலத்திலிருந்து வங்காளத்தில் திருணாமூல் என்ற எளிய மொழிபெயர்ப்பு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருளைத் தந்துவிடுகிறது.   தமிழில் இதற்கு இணையான 'அடிமட்ட' என்ற சொல்லில் அந்த வீச்சு இல்லை. 'திரணம்' என்ற சமஸ்கிருத மூலச் சொல்லை எங்கே கேட்டிருக்கிறோம்?  பாரதியின் புதிய ருஷ்யாவில். மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள்  ... இரணியன் போல் அ...

மொழிபெயர்ப்புகளின் மொழி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்   தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்   தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்   சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர்   அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். பாரதி சொன்னாரென்று தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி மூன்று வருட அனுபவம் பெற்றேன்.  என்னைப் போல பலரும் மொழிபெயர்ப்பதை பாரதி கண்டால் சந்தோஷப்பட்டிருப்பானா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது.  இந்தக் கட்டுரையில் சுட்டியுள்ள குறைகள் என் எழுத்துக்களிலும் இருக்கின்றன.  மேம்படுத்த முயல்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.  இந்தக் கட்டுரையில் உள்ள சில உதாரணங்கள் வேறொரு மொழிபெயர்ப்பு ஆசிரியரின் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை.  இதே குறைகள் நான் எழுதியவற்றிலும் இருக்கலாம்.  முதல் வருட அனுபவத்திலிருந்து அத்தகைய குறைகள் குறைந்து வந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. தமிழனின் அன்றாட வாழ்வைத் தாண்டி உள்ள சிக்கலான விஷயங்களைத் தமிழில் எழுதுவது எளிதல்ல.  கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ் தேங்கியுள்ளது.  ...

தேங்கிவிட்ட தமிழ் - உபசர்க்கங்கள்

சில ஆண்டுகளாக ஆங்கிலத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த அனுபவத்தில், தமிழ் தேங்கி விட்டது என்ற என் கண்ணோட்டத்தை இங்கு தருகிறேன். சமஸ்கிருதத்தில் உபசர்க்கம் என்ற இலக்கண அம்சம் ஒன்று உண்டு; அவற்றை சமஸ்கிருதத்திலிருந்து எடுத்து,  தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் அதிகம் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு அ நியாயம், அனு தாபம், பிரதி பலன், பரம் பொருள், அதி புத்திசாலி, அவ மானம் போன்றவை.  இந்த உதாரணங்களில் முதலில் பெரிய எழுத்துக்களில் உள்ளவை உபசர்க்கங்கள்.  அவற்றிற்குப் பின்வரும் சொற்களின் பொருளோடு பொருந்தி வேறொரு பொருளை அளிப்பன.  (ஆங்கிலத்தில் இத்தகைய பயன்பாடு இருந்தாலும், அதற்கான திட்டவட்டமான இலக்கணம் உள்ளதா என எனக்குத் தெரியாது.) தமிழில் இயல்பான உபசர்க்கங்கள் மிகக் குறைவு .  தலை, கை, முன், பின் போன்றவை நமக்குப் பழகியவை.  பிற உபசர்க்கங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை.   உபசர்க்கங்கள் இல்லாவிட்டால் என்ன? உபசர்க்கங்கள் இல்லாவிட்டால் பல சொற்களைப் பயன்படுத்தி தேவைப்பட்ட பொருளைப் பெற வேண்டும்.  இதற்கு ஒரு உதாரணத்தைக்...

Google's transliteration application for Indic languages

Compared what Microsoft offered through www.bhashaindia.com, Google's transliteration application much better. Considering the IME runs on the client, it could have been a lot better in detecting Tamil (though the IME is available for many Indic languages, Tamil happens to be a bit difficult one). For example, to get ன, you have to type the letter n followed by _ (underscore) within a second or so. With a small rule set and /or a dictionary, it could have detected the letter based on the context as Google does. Google does even better. To differentiate between kuril and nedil, most IME expected the users to use upper case. It has been a fair expectation. But it is also the users' common practice to begin a sentence in English with upper case. On transliteration, this caused a needless error and correction. With Google, typing 'Oru' or 'oru' results in a transliteration to 'ஒரு', which is a common word. Google also shows a context menu with oth...

Purpose of a translation

If you have boarded a flight from Chennai's Anna International Airport and you can read Tamil, you might have noticed a sign " மெய்ப்புல அறைகூவலர் ". Ever wondered what it could be? If you can read English, then you can make sense of what this means - yes - it is " Physically Challenged ". I can't imagine who can come with such a dumb translation - that too from English to Tamil in Tamil Nadu. A physically challenged person who knows only Tamil has no use of such a sign board in Tamil.

Tamil LIP from Microsoft for Windows XP

I installed the Tamil Language Interface pack for Windows XP available as a download from Microsoft. One word describes the product - terrible. I would assume the intention of developing such an interface is to enable non-English speaking people to use the computer more easily. The effort seems to be aimed at something else that I can't comprehend. But for the text that appears in standard Windows interface in Tamil, there is nothing to call it as Tamil interface. The language (use of words), structure of sentences, icons and stupid literal translation make it absolutely painful to use it. There is total lack of imagination in translation. Looks like we need a book on user interface designs in Tamil and make the architects of this tool read it. It seem Malan was responsible for the effort. This is one tool that neither Microsoft nor Malan can be proud of. I uninstalled the application exactly 1 minute after I installed it.

தமிழில் வலைக்குறிப்பு?

தமிழில் வலைக்குறிப்பு எழுதமுடியும் என்று ஆரம்பித்தேன். Blogspotன் எடிட்டருக்கும் என் கணினியில் உள்ள IMEக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால், Notepadல் ஆரம்பித்து பின் Blogspotன் எடிட்டரில் Copy செய்கிறேன். தமிழில் மிகச்சில மென்பொருள் கலைச்சொற்கள் பழகிவிட்டன. பல OpenOfficeஇலும், Office XPயிலும் நம்மை படாத பாடு படுத்துகின்றன. Copyக்கு நமக்குத்தெரிந்த தமிழில் என்ன சொல்?