Sunday, October 30, 2022

உஸா

"காலித் முதல் மரத்தை வெட்டினான். பின் நபி அவர்களிடம் சென்று தன் செயலை விவரித்தான்.   ‘ஏதேனும் வித்தியாசமாக நிகழ்ந்ததா?’ என்று அவர் கேட்டார்.  அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான் காலித். இரண்டாவது மரத்தை வெட்டியபோது அப்படியே நிகழ்ந்தது.  மூன்றாவது மரத்தை வெட்டியபோது தலைவிரி கோலத்தில் அல்-உஸா தோன்றி காலிதை அழிக்க ஆணையிட்டாள்.  உடனே காலித் அவளை இரு கூறாக வெட்டினான்.  அவள் சாம்பல் குவியலாக வீழ்ந்தாள்.  பின் காலித் சுலாமியைக் கொன்றுவிட்டு, கடைசி மரத்தையும் வெட்டினான்.  திரும்பி வந்து நபி அவர்களிடம் நடந்ததைக் கூறிய போது, “அந்தப் பெண் அல்-உஸா. அவளை ஒரு போதும் வணங்கக் கூடாது” என்றார் நபி.



-------------------

“அப்பா! என் வீடு...” என்றுதான் அவள் புலம்பியது போலத் தெரிந்தது.  மொழி எது என்று புரியவில்லை.  தமிழாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவள் சொன்னது அது தான் என்று தோன்றியது.  சுவற்றோரம் சாய்ந்தபடி, கையில் பெரிய வாளுடன் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்.  கழுத்தில் செவ்வரளியோ செம்பருத்தியிலோ மாலை போன்று இருந்தது.  அல்லது ரத்தமா?  அவள் புலம்புவதுடன் பார்த்தால் ரத்தமாக இருக்க வாய்ப்புள்ளது.  நம் ஊர் பெண் போலத் தெரியவில்லை.  ஹஜ்ஜில் பார்த்த வட ஆப்பிரிக்கப் பெண் அல்லது யெமன் பெண்ணைப் போல உடுத்தியிருந்தாள். 

அபுபக்கர் திடுக்கிட்டு விழித்தார்.  

“இது என்ன கனவு! என் இறந்த பிள்ளைகளில் ஒன்றா? ஆனால் இந்தப் பெண் சிறுமியல்லவே...”

“இரவில் என்ன சாப்பிட்டேன்...”

போன மாதம் ஹஜ் போய்விட்டு வந்தபின், சாப்பாட்டின் நாட்டம் குறைந்துவிட்டதை உணர்ந்தார்.  எடையும் குறைந்திருக்கக் கூடும்.

எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்தார்.  தூக்கம் வரவில்லை. மணி பார்க்கவும் முனையவில்லை.  சற்று நேரத்தில், ஆஸான் கேட்டது.  எழுந்திருக்கத் தோன்றவில்லை. அப்படியே படுத்திருந்தார்.

 “என்ன ஆச்சு.. இன்னும் படுத்திருக்கீங்க..நீங்க வரலையா?” சலீம் கேட்டான்.  நான்கு குழந்தைகள் இறந்தபின் பிறந்தவன் சலீம்.  

“இல்லப்பா... உடம்பு முடியல. அப்புறம் வரேன்” என்றார்.

அடுத்த நாள் சலீம் அவன் மனைவி கருவுற்றிருப்பதாகச் சொன்னான்.

“ரொம்ப சந்தோஷமப்பா... இனிமேல்  தண்ணி நான் பிடிச்சுட்டு வரேன்.  அம்மா சமைக்கட்டும்.  நல்லா பாத்துக்க.”

அழும் பெண் கனவு அடிக்கடி வர ஆரம்பித்தது.  மசூதியில் யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது.  

----

“என்ன பாய்? உடம்பு சரியில்லையா? கண்ணுக்குக் கீழ கருவட்டம் கட்டியிருக்கு.  ஆளும் இளச்ச மாதிரி இருக்க. வீட்டுல விசேஷம் வருது, முகத்துல தெரியலையே... ஏதாவது பிரச்சினையா? “ என்றார் ராமசாமி படையாச்சி.  

ராமசாமி படையாச்சி பள்ளித் தோழன்.  அபுபக்கர் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டு  வாப்பா கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார்; படையாச்சி எட்டு வரை போனார்.  அதற்குப் பின் குடும்ப வழக்கப்படி கோவில் பூசாரி வேலை.  மதுரகாளி அவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்று அவரைப் பார்த்தால் தெரியும்.  கோவில் நடை திறக்கும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி தவிர பிற நாட்களில் வயலில் இறங்கி வேலை செய்யும் உழைப்பாளி. அவ்வப்போது மதுரகாளி அவர்மீது இறங்கி அருள் வாக்கு தருவதும் உண்டு.  ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

“வாரவாரம் குறி சொல்ல ஆத்தா என்ன சன் டீவில வர சினிமாவா. அவ உதவணும்னு நெனச்சா நாமதான் போய் கேட்கணும்.” என்பார்.

“ஒண்ணுமில்ல... ஒரு கனவு.  கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு.”

படையாச்சிக்குக் கனவுகள்மீது மதிப்பு உண்டு.  வாயுக் கோளாறு இல்லாத நேரத்தில் வரும் கனவு தெய்வங்கள் நம்முடன் பேசும் மொழி என்று அவருக்குத் தெரியும்.  

கனவைப் பற்றி படையாச்சியிடம் சொன்னார்.  “வெள்ளிக்கிழம எட்டு மணிக்கு மேல வீட்டுக்கு வாங்க... ஆத்தாட்ட கேட்டுடுவோம்.” என்றார்.  

அபுபக்கரின் நம்பிக்கை சராசரி இந்தியனைப் போன்றது.  பத்து தலைமுறை இஸ்லாம் இன்னும் இந்த மண்ணில் தோன்றிய தெய்வங்கள் மீதுள்ள நம்பிக்கையை சாய்க்கவில்லை.  கோவிலுக்குச் செல்லாவிட்டாலும், மதுரகாளி போன்ற தெய்வங்கள் அவர் மனத்திலிருந்து துரத்தப் படவில்லை.  அடுத்த தலைமுறை இப்படி இருக்குமா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு.  சலீம் அரசியல் கட்சிக்காக திருச்சி சென்று விட்டு வந்து, கோவில்களைப் பார்த்து முறைப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

----

வெள்ளிக்கிழமை அசைவம் வேண்டாம் என்று சொன்னது அவர் மனைவிக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது.  மாலை ஆறு மணியிலிருந்து பரபரப்பாக இருந்தார்.  எட்டு மணிக்கு படையாச்சி வீட்டிற்குப் போனபோது அப்போதுதான் அவர் வந்து குளிக்கப்போயிருந்தார்.  “உட்காருங்க... அப்பா வந்துருவாங்க.” என்றான் குமார்.  அவனும் கோவில் பணிக்குப் போக ஆரம்பித்து இரண்டு வருடங்களாகிறது.

வீபூதி பூசி படையாச்சி வரும்போதே அவர் சன்னத நிலைக்குச் செல்ல தயாராக இருந்தார்.  கண்மூடி தியானித்துவிட்டு, கண்களைத் திறக்காமலேயே, “ரோட்டுக்குக் கிழக்க கோவில் நிலம் இருக்கு.  அங்க என்னப்பாத்து அக்கா-தங்கை மூணு பேரையும் பிரதிஷ்டை பண்ணு. செல்லாயிக்கு இடம் கொடுத்த நான் உசாவுக்குக் கொடுக்க மாட்டேனா!” என்றார்.

உத்தரவின் படி நடக்க அபுபக்கர் தயாராக இருந்தாலும், நேரடியாக அதில் இறங்குவது சரியாக இருக்காது என்று தோன்றியது.  படையாச்சியே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வார் என்றும் பணம் மட்டும் அபுபக்கர் கொடுப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள்.  பணம் கொடுத்தது அவர் தான் என்று இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டார்கள்.

----

சலீமின் மனைவி பெண் குழந்தையை பெற்றாள்.  சல்மா என்று பெயரிட்டார்கள்.  உசா என்று பெயரிட்டிருக்கலாமோ என்று அபுபக்கருக்குத்  தோன்றியது.

கோவில் எழும்பத் தொடங்கியது.  அழும் பெண் கனவு வருவது தொடர்ந்தது; ஆனால் அவள் இப்போது புலம்பவதில்லை என்று அபுபக்கருக்குத் தெரிந்தது. 

முக்கன்னியர் கோவில் என்று பெயரிடப்பட்டு, கோவிலுக்குக் கும்பாபிஷேகமும் நடை பெற்றது.  மதுர காளி கோவிலில் வைத்துப் பூசை செய்த கலசங்களும், புனித நீரும் வண்டியில் ஊர்வலமாக முக்கன்னியர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குட முழுக்கு செய்விக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் சார்பாக அபுபக்கரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.      கும்பாபிஷேக நீர் தெளிக்கப்படும் போது, அபுபக்கர் கலங்கினார்.  இது தான் ஜம்ஜம் என்று நினைத்தார்.  விழா முடியும் போது, நன்றி நவிலலில் படையாச்சி, அபுபக்கரின் கொடையை நினைவு கூர்ந்தார்.  அருட்பெருக்கில், அபுபக்கர் கண்ணீர் சுரந்தபடி இருந்தார்.  

நெற்றி நிறைய நீருடன், மரியாதை செய்விக்க அணிவிக்கப்பட்ட மாலையுடன் வீட்டுக்கு வந்தபோது, சலீம் குதித்தான்.

“அப்பா, இது ஷிர்க் என்று உங்களுக்குத் தெரியாதா? நாம் அல்லாவின் கோபத்திற்கு ஆட்படப் போகிறோம்.”

இதுவரை ஒரு முறை கூட கடிந்து பேசியிராத அபுபக்கரின் கோபம் தலைக்கேறியது.  “நீ அல்லாவுக்கா பயப்படறவன்?  அரசியல் கட்சிக்காரனுக்காக மசூதிக்குப் போற நீ எனக்கு சொல்ல வேண்டாம்.  நான் செய்வது சரின்னு எனக்குத் தெரியும்; சிறுவாச்சூர் அம்மனுக்குத் தெரியும். அது போதும் எனக்கு.”

சலீம் ஆத்திரத்துடன் வெளியே சென்று பைக்கை உதைத்துக் கிளம்பினான்.  மெதுவாக நடந்து தொட்டிலில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி உச்சி முகர்ந்து, “அவன் கிடக்கான்.  எங்களுக்கு நீ கெடச்சிருக்க தாயி...உஸா!” என்றார்.

Wednesday, October 26, 2022

The Glass Ceiling of Muslims in a Democracy


On Rishi Sunak becoming the PM, the liberals and Congressmen in India began talking about the inability of a minority - read Muslim - to become a PM or a President forgetting their own history of opposing Muslim and Christian President candidates.   I see Sunak becoming the PM as an extraordinary event as no one else came forward to run a country that is a mess.  Even in Britain, it is almost impossible for a Muslim to be the head of state.  

Let me generalize the statement.  "It is almost impossible for a Muslim to be a head of state in democracy in a multi-cultural country."  Why?

In all democracies, whether Parliament or Presidential, the representative has to be elected twice before leading the nation.    In a Presidential system like the US, party delegates vote for the Presidential candidate before the candidate seeks votes from the general public.  In a Parliamentary system the order changes - he gets elected from his constituency and then gets elected by the party as a leader.

Take the case of a Muslim candidate in a Presidential system.  For him to be an acceptable leader, the delegates must vote for him to be the Presidential candidate.  As long as he maintains a Muslim identity, it is impossible to win the candidature from the party colleagues.  So, he has to shed his identity and has to be seen as one among the people of that country - pretty difficult for a Muslim as his allegiance to his god supersedes his allegiance to his country.  Even if he manages to win the candidature of his party colleagues, it is an uphill task to convince people in a multicultural society.  

In the case of a Parliamentary system, he can probably win his constituency fairly easily if the majority of voters are Muslims.  In that case, it is likely that his opponent may also be a Muslim.  To impress Muslim voters, he has to play his Muslim card and not be a leader for all.  He has to be a leader for Muslims first.  Only then he can win his constituency of a few hundred thousand people.  If he manages to win, it is highly likely that his colleague legislators would be suspicious of him because of the strong Muslim identity that he used to win.  That would prevent him to be the leader of his party in the Parliament.

There is one case in which a Muslim can lead the government.  If the party that won the majority has a super PM like Sonia Gandhi, a Muslim can hope to lead the government.  The super PM decides on the leader of the party and everyone falls in line.  This is unlikely to happen in matured democracies and matured democratic parties.



That is how India had Presidents like Fakruddin Ali Ahmed, Zakir Hussain, etc.  Kalam was different as he rarely projected his Muslim identity.  In fact, most Muslims do not see him as their man.  His detachment from the Muslim community was the primary reason that made NDA consider him as their Presidential candidate.

Yes, there is a limit to which a Muslim politician can rise but that is constrained only by his identity and his people - not by the multicultural society he is part of.

If you are a Muslim in a multicultural society and have high political ambitions, try returning to the religion of your ancestors.  It is not just politically rewarding but can also be good for you and the world.



Tuesday, October 11, 2022

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

எச்சரிக்கை:  கல்கியின் பொன்னியின் செல்வன் போல இதுவும் ஒரு கற்பனைக் கதையே.  வரலாற்று ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.

 “இன்றிரவு மன்னர் உங்களை சந்திக்க அழைத்துள்ளதாக சேவகர்கள் தெரிவித்தனர்” என்றான் கிருஷ்ணன் ராமன்.  

“எதற்கு?” கேட்டான் அருண்மொழி.

“அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.” முகத்தை திருப்பிக் கொண்டு பதில் சொன்னான் கிருஷ்ணன்.

“என் கண்ணைப் பார்த்துச் சொல்.  உனக்குத் தெரியும்தானே?”

“மதுரை வெற்றிக்குப் பின் நடந்தவற்றை மன்னர் விரும்பவில்லை என்று அறிகிறேன்.  அது பற்றிப் பேச அழைத்திருக்கலாம் என்பது என் யூகம்.”

அருண்மொழி தலைகுனிந்தான்.  “எனக்கும் நடந்தவை சரியில்லை என்று தான் தோன்றுகிறது.  அண்ணனிடம் எப்படிச் சொல்வது?  அவர் கோபக்காரர்.  மதிப்பில் என் தந்தைக்கு நிகரானவர். இளவரசர் கூட.  அடுத்த அரசருக்கு இடித்துரைக்கும் அளவிற்கு செல்வாக்கு எனக்கு இல்லை.” 

“மன்னர் இளவரசரிடம் பேசியிருக்கலாம்.” 

“இருக்கலாம். இரவில் மன்னரை சந்திக்கப் போகிறேன்.  நீயும் வருகிறாயா?”

“எனக்கு அழைப்பில்லை.  உத்தரவிட்ட செயலை செய்து முடிக்க மட்டும்தான் என் விசுவாசம் உள்ளது.  துணைக்கு வர அல்ல.”

-----

“உட்கார்.” என்றார் மன்னர் சுந்தரச் சோழன்.

“பரவாயில்லை.  இந்த சந்திப்பிற்கு இளவரசர் வரவில்லையா?”

”அவனுடன் நேற்று பேசி விட்டேன்.  அதற்குப் பின் பிரும்மராயருடன் பேசியபின் தான் உன்னை அழைத்தேன்.”

சற்று நேரம் மௌனம் நிலவியது.  மன்னர் தான் பேசத் தொடங்கினார்.

“ஏன் அழைத்தேன் என்று கேட்பாய் என்று நினைத்தேன்.”

அருண்மொழி தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

“நீ ஏன் தலை குனிகிறாய்.  இப்படி ஒரு பிள்ளையைப் பெற்று அவனை இளவரசனாக்கியதற்கு நான் அல்லவா தலை குனிய வேண்டும்?”

அருண்மொழியிடமிருந்து பதில் இல்லை.

“தர்ம சாஸ்திரங்கள் ஒரு அரசனை உருவாக்க பல விஷயங்களைக் கூறுகின்றன.  அரசனாகப் போகிறவன் ஆறு தீய குணங்களை வென்றிருக்க வேண்டும் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.  சொல்! உன் தமையன் அந்த ஆறில் எவற்றை வென்றிருக்கிறான்?  அவனைக் கேட்டால் மதுரையை வென்றதை பெருமையாகப் பேசுவான்!”

“இளவரசர் கோபக்காரர்தான். ஆனால்...”

“அது மட்டுமா?” வறட்சியாக சிரித்தார் மன்னர்.  “தன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவன் எப்படி பரந்து விரிந்த சோழத்தைக் கட்டுப் படுத்தப் போகிறான்?”

”நீ விவேகி என்று எனக்குத் தோன்றுவதால் சொல்கிறேன்.  குறுநில மன்னன் போல சண்டையிட்டு, எல்லையை விரிவாக்கும் காலம் போய்க்கொண்டிருக்கிறது.   உத்தமனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.  பிரும்மதேசத்தை சோழத்தின் கீழ் கொண்டுவர அவர் கொடுத்த உபாயம் தான் வந்தியத்தேவனுக்கு உன் தமக்கையை மணமுடித்துக் கொடுத்தது. கொடுக்கல்-வாங்கல், திருமண உறவு போன்றவற்றால் நம் எல்லையை விரிவாக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது.  இப்போதும் கொடூரக் கொலைகாரன் போல நடந்து கொள்ளும் அரசனை மக்கள் எப்படி மதிப்பார்கள்?”

”நீங்களும் சித்தப்பா உத்தமரும் பிரும்மராயரும் சொன்னால் அண்ணன் கேட்பார்.  அவர் உங்கள் எண்ணங்களை உணர ஒரு வாய்ப்பு தாருங்கள்.”

“இந்த நிதானம் தான் வருங்கால அரசர்களுக்குத் தேவை.  நீ சொல்வதால் ஒரு முறை அழைத்துப் பேசுகிறேன்.  எனக்கு நம்பிக்கையில்லை.  நேற்று அவனைக் கடிந்து கொண்டதால் இன்னும் என் மீது கோபத்தில் இருப்பான் என்று நினைக்கிறேன்.  இரண்டு நாட்கள் போகட்டும்.  பெரியவர்கள் பேசிக் கொள்கிறோம்.  நீ  அங்கு வரவேண்டாம்.  நாளை உத்தமனை சந்தித்து என் கவலையை நீ தெரிவித்து விடு.”

----

“இளவரசர் அவசரமாக கடம்பூர் செல்ல வேண்டியிருந்ததால், இங்கு வர முடியவில்லை என்று தெரிவிக்கச் சொன்னார்” என்றான் சேவகன்.

“நீ போகலாம்.”

சுந்தரச் சோழனின் முகம் இறுகியது.  “இன்னொரு அறிவுரை கேட்க, அதுவும் பிறர் முன்னிலையில் கேட்க அவன் தன் மானம் இடம் கொடுக்கவில்லை போலும்.” 

அவரே பேசட்டும் எனக்காத்திருந்தனர் பிரம்ம ராயரும் உத்தமச் சோழனும்.

“ஆதித்தனின் இந்த வெறிச்செயலால், நாம் மதுரையை வென்ற செய்தி கூட கசப்பாக இருக்கிறது.  நான் ஆதித்தனை அரசனுக்குரிய தகுதிகளுடன் வளர்க்கவில்லை என்று பெரியவர்கள் கூறும் போது நான் பேச்சற்று நிற்கிறேன்.”

“அவன் இங்கு வராமல் இருந்ததும் நல்லதற்குத்தான். நாம் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.”

மௌனத்தைக் கலைத்தார் பிரம்மராயர்.  “ஆதித்தனை இளவரசாக்க அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறதா மன்னரே?”

“கடந்த காலத்தை விடுங்கள்.  வீரம் மட்டும் ஒருவனை நல்ல அரசனாக்காது.  பாண்டியனைக் கொன்ற பின் அவன் உடலுக்கு ஒரு வீரனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்திருந்தால், பாண்டிய நாட்டவர் நம் மீது ஓரளவிற்காவது பணிந்து இருப்பர்.  அவர்களில் இருந்தே ஒருவனை அரசனாக்கி நம் ஆட்சியின் கீழ் அவனை ஆள விடுவது எளிதாக இருந்திருக்கும்.  அதை விட்டுவிட்டு, பாண்டியனின் தலையை வெட்டி...சொல்லவே கூசுகிறது.  யாரும் இதை நல்ல குடியில் பிறந்தவனின் செயலாகக் காணமாட்டார்கள்.”

“ ஒரு வேளை ஆதித்தனுக்கு முடி சூட்டும் எண்ணம் எனக்கு என்றாவது இருந்திருந்தால் அது இன்றோடு முற்றுப் பெருகிறது.  உத்தமா!  நீயே அடுத்த சோழ மன்னனாக வேண்டும் என்பதே என் விருப்பம்.”

“என் தந்தைக்கு நிகரான மன்னரே! நான் மன்னனாக விரும்பியிருக்கிறேன்.  ஆனால் அதற்கு நான் தகுதியானவனா என்று பல முறை சிந்தித்திருக்கிறேன்.  போர்களில் சோழம் பெற்ற வெற்றிகளை களத்தில் இறங்கி வாள் வீசியவர்களின் வெற்றியாகவே நான் கருதுகிறேன்.  ஆதித்தன் உட்பட எனக்குக் கிடைத்த வீரர்கள் பெற்றதே அவ்வெற்றிகள். எனக்குப் போர்களில் ஈடுபாடு இல்லை.  தேவைக்கு அதிகமாகவே நான் போரிடுகிறோம் என்றே பல முறை நினைத்துள்ளேன்.  உங்கள் அன்பிற்கும் கட்டளைக்கும் பணிந்தே  அதிக ஈடுபாடின்றி சோழத்திற்காகப் போரிடச் சென்றேன்.    உங்கள் விருப்பம் நான் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் நான் பணிவேன்.  ஆனால், போரில் விருப்பம் இல்லாதவன் மன்னன் ஆவது சரியா?”

“உத்தமா, உன் அறிவு முதிர்ச்சிதான் ஒரு மன்னனுக்குத் தேவை.  போரிட வீரர்கள் உண்டு, தலைமை தாங்க தளபதிகள் உண்டு.  போர் தேவையா, தவிர்க்கக் கூடியதா என்று சிந்திக்க, நிதானம் உள்ள அரசனால் மட்டுமே முடியும்.  அது உன்னால் முடியும் என்று எனக்குத் தெரியும்.  குந்தவையும் வந்தியத் தேவனும் கூட ஒப்புக் கொள்வர்.  அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருப்பதைக் கூட உன் சாதனையாக நினைக்கிறேன்.”  இதைச் சொல்லும்போது தான் அவரால் புன்னகைக்க முடிந்தது.

“ஆதித்தன் இதை விரும்ப மாட்டான்.  அவனைப் பொறுத்தவரை நான் கோழை அல்லது வேகமற்றவன்.  நான் அரசனானால் எப்போது யார் என்னைக் கொல்வார்கள் என்று பயந்தபடியே ஆளவேண்டும்.”

“அதை பிரம்ம ராயர் பார்த்துக் கொள்வார்.  எங்கும் சென்று விடாதே. இங்கு பணிகள் உள்ளன.   எனக்கு நீ ஆதரவாக இருந்தது போல, உனக்கு ஆதரவாக அருண்மொழி இருப்பான்.  இப்போது நீ போகலாம்.  பிரம்ம ராயரே, நீங்கள் இருங்கள்.”

-----

”ஆதித்தன் கடகமல்ல மன்னரே, அவர் உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளார்.”

“என் மீது வைத்துள்ள மதிப்பு முக்கியமல்ல, என்னை ஆதித்தன் கொல்ல முயல்வான் என்று நான் பயப்படுபவனல்ல.  ஆதித்தன் அரசனாவது சோழ சாம்ராஜ்யத்தின் முடிவிற்கு ஆரம்பமாகும்.  அதை நான் விரும்பவில்லை.  அர்த்த சாஸ்திரங்கள் கூறியபடி, அவனை இங்கிருந்து வெளியேற்றி எல்லைகளுக்கு அனுப்பி வைத்தேன்.  அவன் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டான் என்பதன் அடையாளம் அவன் வீரபாண்டியனின் உடலுக்கு இழைத்த அவமானம்.  வீர பாண்டியனின் தலையை வெட்டியபோது என்னை நினைத்திருப்பான் என்று தோன்றுகிறது.  மேலும் வெட்டிய தலையை சோழ நாட்டின் தலைநகருக்குக் கொண்டு வரவேண்டிய தேவை என்ன?”

”அர்த்தசாஸ்திரங்கள், இப்படிப்பட்ட இளவரசனை சிறையில் அடைக்கவும்  ஆலோசனை கூறுகின்றன.  சிங்கத்தை சிறையில் அடைத்துப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை.  பாரத்வாஜரின் அர்த்தசாஸ்திரத்தில் கூறியது போலச் செய்து விடுங்கள்...”

“தஞ்சாவூர் முத்தரையர்களையோ மதுரை மறவர்களையோ இதில் சம்பத்தப் படுத்தாமல் செய்து முடியுங்கள்.  அதனால் விளையும் கிளர்ச்சிகள் தவிர்க்கப் படவேண்டியவை.  சோழத்தின் மீது பற்றுள்ள பார்ப்பனரைப் பயன்படுத்துங்கள்.  தேசத்தின் மீதுள்ள பற்றிற்கும் இளவரசர் மீதுள்ள விசுவாசத்திற்கும் அவர்களால் தர்க்கரீதியாக வேறுபாட்டைக் காணமுடியும்.”

“உத்தரவு மன்னரே.”  


Earlier Posts