Posts

Showing posts from June, 2016

மாதிரி

சந்துரு அதிகம் மாறவில்லை.  சற்று முன் வழுக்கை,  பனிரெண்டாம் வகுப்பில் பார்த்தது போலத்தான் இருக்கிறான்.  கடந்த ஐந்து நாட்களில் மற்ற நண்பர்களிடம் அதிகம் பேசப்பட்ட விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.  இருபத்தைந்து வருடங்கள் கழித்து சந்திக்கும்போது, கண்கள் முதலில் தலையையும்,  வயிற்றையும் தான் பார்க்கின்றன. கம்ப்யூட்டரும், ஒய்டூகேவும் வீசிய அலையில், எங்கள் வகுப்பிலிருந்த பத்து பேர் தவிர, மற்ற எல்லாரும் வெளி ஊர்களுக்கும், நாடுகளுக்கும் தூக்கி வீசப்பட்டோம்.  தேங்கிய அந்த பத்து பேரில் சந்துருவும் ஒருவன்.  அவன் திருச்சியிலேயே இருந்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.  அவனுக்குக்கூட திருச்சியிலேயே சம்பாதிக்கும் வாய்ப்பு வந்ததுதான் ஆச்சர்யம்.  ஓரளவு எழுதப்படிக்க, ஆணைக்கு கட்டுப்பட தெரிந்துவிட்டாலே சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுக்கும் வணிகமய காலம்!   ஶ்ரீரங்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கை வைத்த பனியன் அணிந்த, சந்துருவை பார்க்கும்போது அவன் அப்பா நினைவுக்கு வந்தார். “அப்பா எங்கே?” என்றேன். “அப்பா, அம்மா ரெண்டு பேரும், டெக்ஸாஸ்ல அண்ணா...