கஷ்மீர் ஃபைல்ஸ் - சில சிந்தனைகள்
கஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்துவிட்டு வந்து சில நாட்களாகின்றன. மனம் இன்னும் அமைதியடையவில்லை. அதற்குக் காரணம் - படத்தில் கண்ட வன்முறை மட்டுமல்ல; படத்தில் காட்டிய வன்முறையை விட பல மடங்கு கொடுமைகளை பண்டிட்டுகள் சந்தித்துள்ளனர் என்பதை நாம் வெறும் தகவல்களாக அறிவோம். இத்தனை வருடங்கள் நாம் பண்டிட்டுகளின் பாதிப்பை உணராமல் இருக்கின்றோமே என்பது பெரும் சோகம். இந்த ‘நாம்’ என்னையும் சேர்த்துத்தான். உணர்வுத் தீவுகள் வாயில் மைக்கைத் திணித்து கருத்து வாங்கும் தொலைக்காட்சி கலாச்சாரம் வந்தபின்னும், நதிமார்க் படுகொலையை மக்கள் முன் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேட எந்தத் தொலைக்காட்சியும் பத்திரிகையாளரும் முன்வரவில்லை. அவர்கள் பிழைப்புக்காக அடுத்த செய்திகளுக்குத் தாவி விடுவர் என்பது இயல்பு. 1990களில் பிட்டா கராத்தேயுடனான அந்த நேர்காணலைப் பார்த்த நினைவிருக்கிறது. அதில் அவன் முதலில் கொன்றது சதீஷ் என்ற பண்டிட் இளைஞனை என்பது நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட அந்தக் காட்சி ‘ரோஜா’ திரைப்படத்தில் வந்தது. அந்தப் பண்டிட்டின் குடும்பத்தின் கதி என...