Posts

Showing posts from May, 2024

Judging the past with today's values

Social media, especially Twitter has people taking extreme sides on castes, there are hardly any conversations but a lot of noise. Here's my attempt to give a perspective on where we are and the way forward.  Context I'm a Brahmin by the standard definition of a Brahmin - born in a Brahmin family, brought up a Brahmin and I continue to try to be a Brahmin. I rever the Vedas and all the traditions - some of which aren't  Brahminical.  I can be stamped a 'trad' and my views can be brushed aside. If you are curious to understand the history, context, and everything in between, please continue reading further.  Some History Historically we Hindus have been a segregated society.  Everyone minded his own business and there were limited touchpoints between communities. A farmer and a merchant, a merchant and a warrior, and everyone with the other had limited interactions.  There was no public transportation for people to interact with each other regularly.  T...

தசம பாகம் அல்லது பூவும் பொட்டும்

[இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே.  இந்தக் கதையின் கரு கார் ஓட்டும் ஒரு நண்பர் கொடுத்தது.  அவர் செய்ய நினைத்ததாக விளையாட்டாகக் கூறியதை சற்றே மசாலா தடவி பொறித்துள்ளேன்.] மோசஸுக்கு எதேச்சையாகத் தான் அந்த யோசனை தோன்றியது.  ஊழியத்திற்குப் போக முடியாமல் பணியின் அழுத்தம்.  வாக் இன் இண்டர்வ்யூ என்று ஏதாவதொரு நகரத்திற்கோ, சிற்றூருக்கோ வாராவாரம் அலைச்சல்.  திங்கட்கிழமை காலை தவறாமல் பாஸ்டர் கூப்பிட்டு விடுவார்.  பிளாக் செய்யலாமா என்று கூட யோசித்திருக்கிறான்.  உடனே எடுக்காவிட்டாலும், மரியாதைக்காக பின்னர் கூப்பிட்டுவிடுவான்.  ஒரு திங்கட்கிழமை தவறு செய்ய சிறு வாய்ப்பை பாஸ்டர் கொடுத்தார். இண்டர்வ்யூ முடிந்து ஆஃபர் லெட்டர் தயாரிக்கும் பணியில் இருந்த போது பாஸ்டரின் அழைப்பு வந்தது. "நீங்க வேலை விஷயமா ஊர் ஊரா அலையுறீங்க.  எத்தனை பேரை சந்திப்பீங்க! அதுல ஒருத்தர் கிட்ட கூட நீங்க கர்த்தர் பற்றி கூட பேசியிருக்க மாட்டீங்களா என்ன?  உங்களோட நம்பிக்கை பற்றி எனக்குத் தெரியும்.  பேசியிருந்தீங்கன்னா அவங்க பெயர், விவரங்களை அனுப்புங்க. நம்ம க...

The ticking bomb of class divide

[This was in my draft for months. Recently, I began translating Dharampal's Rediscovering India into Tamil.  It triggered me to take up this draft, complete and publish it.] A few years ago, we had a school reunion. When in school, we had students from primarily middle-class families.  But there were a few rich kids and a few poor kids.  There was a student from a leading doctor's family, one from a wealthy landlord's family, and so on.  And there were also students from families that earned their daily bread from watch repairs, small-time trading, teaching, etc.  It was a good mix of many communities with a simple pure friendship that continues for decades. It helped in at least knowing about the other communities and classes.  In later years, this friendship helped in helping each other.  Decades ago, when private vehicles didn't dominate our roads, most of us used to travel by public transportation.  That is another opportunity to know about th...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

சில வரலாறு தொடர்பான புத்தகங்களை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தது. அதின் மூலம் வெகுஜனங்களைக் குறி வைத்து எழுதப்படும் வரலாறு பற்றி புரிந்தது. வரலாறும் பிற ஆராய்ச்சித் துறைகளைப் போல வறண்டதே. அசாத்திய பொறுமையும் ஊகிக்கும் திறனும் இருந்தால் வரலாற்றை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.   அதை வெகுஜனங்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும் அதற்காக அடிப்படைகளில் கை வைக்கக் கூடாது.  வரலாற்றுக் கட்டுரையை தினத்தந்தி தலைப்பு போல எழுதுவது ஆராய்ச்சிக்கு இழைக்கப்படும் அநீதி.   பொது மக்கள் வரலாற்றை மறந்து விடக்கூடாது என்பதற்காக இலக்கியங்கள் பயன்பட்டன.  அவை வரலாற்றை சுவாரஸியமாக்கின. உதாரணத்திற்கு நமது இதிகாசங்கள்.  வெவ்வேறு காலகட்டத்தில் அவற்றில் உப கதைகள் சேர்க்கப்பட்டு, பல்வேறு கால சரித்திரங்கள் அவற்றில் மறைந்துள்ளன.   மகாபாரதப் போரில் பாண்டியர்கள் பங்கு பெற்றனர் என்பது உண்மையா, பொய்யா என்று தெரியாது.  ஆனால், மகாபாரதம் எழுதப்பட்ட போது, பாண்டியர்கள் தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்தினர்;  அவர்கள் வட நாட்டிலும் புகழ் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது....