Posts

Showing posts from June, 2024

Governing a Community

Residents Welfare Associations (RWA) have become the de facto local governments in our cities. At the lowest level, the responsibility is for the upkeep of the common area.  As the properties get bigger, more responsibilities like Security, Lifts, Water Management, Genset get added.  That is, on a smaller scale RWA begins sharing the local government's responsibilities of safety, water and power supply.  Bigger RWAs have to deal with waste water treatment (Sewage), maintenance of streets, gardens and other facilities like a mini PWD. It's the need of the hour.  In fact, leaving it to the RWA may ensure better service than what the government has to offer.  But how well equipped are the RWAs to deal with its level of governance?  Reluctance to Take Responsibilities Whether the residents are young or old, more so if they are young, do not want to take any responsibility towards common causes.  RWA responsibilities do consume one's time, is an unpaid and ...

புண்ய க்ஷேத்ரே காசி க்ஷேத்ரே

Image
By Marcin Białek - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=1464739 6 வாராணசி எனப்படும் காசி ஆன்மீக பூமி.   தெய்வங்களின் சைதன்யம் காசியில் நிரம்பியுள்ளது.  அதனால் தான், காசி மக்களை ஈர்க்கிறது.  சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் மிகச்சில நகரங்களில் காசியும் ஒன்று.  ஒரு பெரும் ஆலமரம் போல, உயிருள்ள ஜீவனாக உள்ளது காசி.  அதை பகுத்துப்பார்க்கும் மனத்தால் புரிந்து கொள்வது சுலபமல்ல.  பல்வேறு தகவல்களை எப்படியோ சேமித்து வைத்திருக்கும் unconscious மனதுக்கு இணையானது வாராணசி.  இது ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு முழுமையான பதிலேதும் காசியில் கிடைப்பதில்லை. பல்லாயிரம் கேள்விகளைக்  கேட்டுக் கேட்டு அலுத்து கேள்வியும் அடங்கிப் போவது தான் காசியின் சிறப்பு. காசியில் இருக்கும் வரை கடந்த காலத்தின் சுமைகள் இருப்பதில்லை.  வருங்காலத்தின் பயமும் இருப்பதில்லை. அங்கு வரும் யாத்ரீகர்கள் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு காசி அளிக்கும் அனுபவத்தைப் பெறுகின்றனர்.  காசியில் செய்ய வேண்டிய கடமைகளும், தரிசிக்க வேண...

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 3

முதல் பகுதி இரண்டாம் பகுதி சில முக்கிய குறிப்புகள் 1. நம் வீடுகளில் இருக்கும் அளவிற்கு புண்ணிய க்ஷேத்திரங்களில் சுத்தமோ, ஆச்சாரமோ இருக்காது. அதனால் அந்த விஷயங்கள் உங்கள் ஈடுபாட்டை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2. புண்ய க்ஷேத்திரங்களில் செய்யும் சடங்குகள் நாம் நம் ஊரில் செய்யும் சடங்குகளிலிருந்து சற்றே மாறுபடக்கூடும். 3. குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு கிடைப்பது கடினம். சில நாட்களில் மதியம் மூன்று மணிக்கும் மேல் ஆகலாம். பிரஷர், சுகர் உள்ளவர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். 4. காசி படித்துறைகளில் இறங்கி ஏற குறைந்த பட்ச ஆரோக்கியமும் ஓரளவு வலுவான முழங்கால்களும் தேவை. 5. சில படித்துறைகளில் உள்ள பாசமும், ஆழமும் நேரே கைலாயத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். கைலாயம் செல்லத் தயராக இல்லாதவர்கள் கவனமாக இருக்கவும். 6. அதிக வயதானவர்களை அழைத்துச் செல்வதாக இருந்தால், அவர்களை முழு நேரம் கவனித்துக் கொள்பவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். வயதானவர்களைக் கவனித்துக் கொண்டே, சடங்குகளில் முழு மனதாக ஈடுபடுவது சாத்தியமில்லை. 7. சில இடங்களில் சக்கர நாற்காலி கிடைக்கும். காசியி...

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 2

Image
முதல் பகுதி யாத்திரை காசி செல்லும் முன், இராமேஸ்வரம் சென்று, கடலில் நீராடி பிந்து மாதவர், சேது மாதவர், வேணி மாதவர்களை மணலில் லிங்கங்களாகச் செய்து, அவற்றில் சேது மாதவரை சமுத்திரத்திற்கும், பிந்து மாதவரை அந்தணருக்கும் தானமாக அளிக்க வேண்டும்; வேணி மாதவரை, காசிக்கு எடுத்துச் செல்ல ஒரு (பித்தளை) சம்புடத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இராமநாதஸ்வாமி கோவிலில் உள்ள 22 கிணறுகளில் நீராடிவிட்டு முன்னோர்களுக்கு சிரார்தம் செய்த பின் இராமேஸ்வரத்திலிருந்து பிந்து மாதவரை இட்ட சம்புடத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பிந்துமாதவர் மீது உள்ள ஈரம் காயும் முன், காசிக்குச் செல்ல வேண்டும். 1. காசி யாத்திரையின் முதல் கட்டம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) தொடங்குகிறது. பிரயாக்ராஜிலும் இவற்றிற்கு ஏற்பாடு செய்பவர்கள் இருக்கின்றன. காசியில் ஏற்பாடு செய்தவர்கள் மூலம் இதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் சிவ மடம் என்ற இடத்தில் சடங்குகளைச் செய்தோம். அங்கிருந்து திரிவேணி சங்கமத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, பெண்கள் பூமுடி அளிப்பதும் (வேணி தானம்) ஆண்கள் தலையை மழித்துக் கொள்வதும் வழக்கம். இராமேஸ்வரத்திலிருந்து ...

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 1

Image
  அறிமுகம் இது கல்யாணத்தின் போது, குடை, கைத்தடி, கண் மை சகிதமாக மாமனார் பெண் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் போகும் யாத்திரை பற்றிய பதிவு அல்ல.  கால் நடையாகச் சென்று திரும்பி வருவோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாது அந்தக் கால மனிதர்கள் போன காசியாத்திரை பற்றியதும் அல்ல.  ஓரளவு வசதிக்குப் பழகிவிட்டு, சம்பிரதாயங்களை முடிந்தவரை கடைபிடிக்கும் சாதாரணர்கள் இரயிலிலோ விமானத்திலோ போகும் காசியாத்திரை பற்றியது.   அதிலுள்ள சடங்குகள் பற்றிய சிறிய அறிமுகம்.  இது திட்டவட்டமான சாஸ்திர வழிகாட்டி அல்ல.  மேலும் இந்தச் சடங்குகளை ஏன் செய்ய வேண்டும் அல்லது அவற்றைச் செய்வதால் என்ன பலன் போன்ற விவரங்கள் இந்தக் கட்டுரையில் இல்லை. காசி யாத்திரை செல்ல முடிவெடுத்தபின், காசியிலும் பிற இடங்களிலும் சடங்குகளுக்கும் பிற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்ய காசியில் பலர் உள்ளனர்.  அனேகமாக சாஸ்திரிகள் பலருக்கும், நேரடியாகவோ அல்லது பிற தொடர்புகளும் மூலமோ காசியில் ஏற்பாடு செய்பவர்களைப் பற்றி தெரிந்திருக்கும்.  அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொள்வது நலம்.  அவர்களில் பலர், தெளிவான தகவல் பரிமாற்ற...

எழுதப்பட்டவை எல்லாம் கராறான வரலாறு அல்ல

எழுதப்பட்ட வரலாறு ஒரு குத்துமதிப்பான உண்மை.  உதாரணத்திற்கு, 'நான் இன்று காலை பொங்கல் சாப்பிட்டேன்’ என்பது போன்ற எளிமையான தகவலாக வரலாற்றைப் புரிந்து கொள்வது சரியல்ல.  இதைச் சொல்லும்போது நான் சுய நினைவுடன் இருக்கிறேன், எனக்கு இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை போன்ற காரணங்களால் இன்று இந்தக் கூற்று பெருமளவுக்கு உண்மை.  ஆனால், ‘அவன் அன்று காலை பொங்கல் சாப்பிட்டான்’ என்ற ஒரு வரலாற்று கூற்றை எடுத்துக் கொண்டால், பின் வருவன எல்லாம் சாத்தியமானவை: அவனோ அல்லது அவன் வம்சத்தில் யாரோ பொங்கல் சாப்பிட்டார். அவன் அன்று காலை ஏதோ சாப்பிட்டான். அவன் என்றோ பொங்கல் சாப்பிட்டான். இவற்றில் பொதுவான விஷயம் ‘சாப்பிட்டது’ மட்டுமே. ‘பொங்கல் சாப்பிட்டான்’ என்பதற்கு அந்தக் கூற்று எழுதப்பட்ட காலத்தில் ‘உணவுப் பொருள் பொங்கலை ஒருவன் சாப்பிட்டான்’ என்பது மட்டுமே பொருள் என்ற ஊகமும் உள்ளது.  அந்தக் காலத்தில் ஒருவன் அடி வாங்கியதை இடக்கரடக்கலாக ‘பொங்கல் சாப்பிட்டான்’ என்று கூறும் வழக்கம் இருந்ததா என்று நமக்குத் தெரியாது.  இவற்றுடன் மொழி பெயர்ப்புகள், பொருள் கொள்ளல் போன்ற மாற்றங்களும் எழ...