Posts

Showing posts from October, 2023

Celebrate Navaratri and protect your kids from liberalism

Image
 नवरात्रि की हार्दिक शुभकामनाएं. In a WhatsApp group, one friend called it as a Protein festival; another called it a pro-teen festival.  How true!  Our festivals can be fun for the teens and can also keep them connected with our roots.  More importantly, they can prevent them from becoming a toxic liberal.  Here are some to-dos for parents and grandparents to protect their children from the toxicity of liberalism. Liberalism is a political and moral philosophy based on the rights of the individual, liberty, consent of the governed, political equality, right to private property, and equality before the law.  The fundamental problem of liberalism is its total disconnect from reality, aesthetics, and all good things that come from traditions. Some of the ideals of liberalism were always there, not at a practical or social level but at a more spiritual level.   The practical world is a lot different and it can be a mess if ideals of the spiritual wor...

கோவில்கள் ஏன் அரசின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்?

 ‘கிறிஸ்தவர்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஆரம்பிக்காது இருந்தால், இந்த நாட்டில் பாதிக்கு மேல் படிப்பறிவின்றி இருப்பர்’ என்று அவ்வப்போது திராவிட அரசியல்வாதிகள் கிறிஸ்தவர்களின் கூட்டங்களில் பேசுவதுண்டு.  அதே போல, கிறிஸ்தவர்கள் இல்லாவிட்டால் மக்கள் மருத்துவமனைகள் இல்லாது நோயில் உழன்று கொண்டிருப்பர் என்ற கருத்தும் இருக்கிறது.  இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, கல்வி மருத்துவமனைகளில் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துவந்துள்ளது. கல்வியும் மருத்துவமும் வணிகமயமான காலத்திற்கு முந்தைய காலகட்டத்திலிருந்து இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.  அவை இரண்டும் வணிகமயமானது துரதிஷ்டவசமானது. அவை வணிகமயமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் லாபத்தை எதிர்பார்க்காமல், மக்களின் கொடையை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்.  அப்படித்தான் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இயங்கின.  மேலை நாடுகளில் உள்ள சர்ச்சுகளில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்களுடைய நன்மைக்காக என்று கூறி பெறப்பட்ட நிதி தான் இந்த நிறுவனங்களை நடத்த உதவியது. ஹிந்துக்களில் யாருக்கும் உதவும் எண்ண...

மதமாற்றத்தால் ஹிந்து தர்மத்திற்கு ஆபத்தா இல்லையா?

 ஹிந்து மதம் நம்மை எல்லாம் விடப் பெரியது.  நாம் அழிந்துவிடப் போகும் அற்ப ஜீவிகள்; சனாதனம் அழிவில்லாதது.  எந்த மத மாற்றத்தாலும் அது அழியப்போவதில்லை. வரவிருக்கும் ஆபத்தை உணராத ஹிந்துக்கள் கூறுவது தான் மேற்கண்ட கருத்து.  அதில் ஓரளவு உண்மை உள்ளது  ஆனால் மதமாற்றத்தால் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியம்.   முதலாவதாக அழியப்போவது, நான் முன்னே குறிப்பிட்ட சுதந்திரம்.  காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றபடி, தனது தெய்வங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை இழக்கிறான்.  அவன் குடும்பத்தினரும் சந்ததியினரும் கூட இந்த சுதந்திரத்தைப் பெற முடியாது. இரண்டாவது குடும்ப உறவுகள்.  மதமாற்றத்தால் உறவுகள் முறிந்ததை அறிவோம்.  (என்னுடன் பணி புரிந்தவர் தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்வதற்காக மதம் மாறிய சம்பவங்களும் அதற்குப் பின் அவர்களுடைய குடும்பத்தில் அமைதி குலைந்ததையும் பார்த்திருக்கிறேன்.)  இதை விவரமாகப் பார்க்கவேண்டுமென்றால், ஒரு மதப்பிரச்சாரகரின் மகள் அளித்த பேட்டியை பரிந்துரைக்கிறேன்.  (https://www.youtube.com/watch?v=r-fITuua3jY...

யார் ஹிந்து, யார் சனாதனி, யார் இவை இரண்டும் இல்லை?

 "பல தெய்வங்கள் உண்டு; அவர்கள் பல உருவங்களை ஏற்பது உண்டு; அவர்கள் மனிதர்களாக இறங்கி வருவதும் உண்டு; அவர்களை நீங்கள் உங்களுக்கு ஏற்ற வழியில் வழிபடமுடியும்.  உங்கள் தெய்வமும் அதன் வழிபாடும் காலத்திற்கேற்ப மாறும். உங்களுடைய நடத்தையும் அதன் பலனும் உங்கள் கையில்.  நீங்கள் வேண்டினாலொழிய, தெய்வங்கள் அவற்றில் தலையிடுவதில்லை."  இந்த நம்பிக்கை கொண்டவர்கள் சனாதனிகள். ஹிந்துக்கள் இந்த நம்பிக்கைக்கு உட்பட்டவர்கள்.  எனினும் இன்று  இந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும், என்றேனும் ஒரு நாள் இந்த நம்பிக்கையை ஏற்கும் சுதந்திரம் உள்ளவர்கள் ஹிந்துக்கள். இந்த சுதந்திரம் இல்லாதவர்கள் ஹிந்துக்கள் அல்லர்.  சுதந்திரம் இருப்பதாக பொய்யாகக் காட்டிக்கொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் உரிமை பெற்ற மதத்தினர் (அல் தகியா), சட்டபூர்வமாக அந்த மதத்திலிருந்து வெளி வரும் வரை, அவர்களை எப்படியும் ஹிந்துக்களாகக் கருத முடியாது. வாழ்வின் குறிக்கோள் விடுதலை - முக்கியமாக மனத்திலிருந்து விடுதலை (விடுதலை பெற்று இறைவனுடன் ஐக்கியமாவது).  அதை எட்ட, பல படி நிலைகளும், பிறப்புகளும் வழிகளும் உண்டு. இது ...