ரஷ்ய தொலைக்காட்சி
குறைந்த செலவில், வேறு நாட்டு தொலைக்காட்சி பார்க்க முடியும் என்பது எங்களுத்தெரியும். கோடைக்கானலில் இருந்து வரும் சென்னைத் தொலைக்காட்சி நாங்கள் அதிகம் பார்க்காவிட்டாலும், போதுமானதாக இல்லை. மார்ச், ஏப்ரல் மாதங்களில், இலங்கையிலிருந்து ரூபவாஹினி அலை அலையாகத் தெரியும். அதை தெரிய வைக்க, இயற்கை ஒத்துழைத்தால் மட்டும் போதாது. மொட்டை மாடியில் ஆண்டெனாவைத் திருப்ப ஒருவர், தொலைக்காட்சி பெட்டியின் டியூனரை திருக ஒருவர், இவர்கள் இருவரையும் மேய்க்க ஒரு கண்காணிப்பாளர் ஆகிய மூன்று பேர் இருந்தாலே அது சாத்தியம். அபூர்வமாய், ஏப்ரல், மே மாதங்களில் பங்களாதேஷின் பச்சை பின்னணியில் செய்தி வாசிப்பது தெரியும். எப்படி என்று யோசிப்பவர்கள், சுஜாதாவின் ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை. குறைந்த செலவில், ரஷ்யத் தொலைக்காட்சியை வரவேற்பது எப்படி என்று எலக்ட்ரானிக்ஸ் ஃபார் யூவில் வந்திருந்த அந்த கட்டுரை எங்களுக்கு ஆர்வமூட்டியது. இதில் நாங்கள் என்பது, நானும், கல்யாண், ரவி, திருவி என்றும் இன்னும் பல பெயர்களில் விளிக்கப்படும் எனப்படும் கல்யாணசுந்தரமும் தான். பத்து, பனிரெண்டு அடிக்கு அலுமினியப்பட...