Saturday, May 11, 2024

தசம பாகம் அல்லது பூவும் பொட்டும்

[இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே.  இந்தக் கதையின் கரு கார் ஓட்டும் ஒரு நண்பர் கொடுத்தது.  அவர் செய்ய நினைத்ததாக விளையாட்டாகக் கூறியதை சற்றே மசாலா தடவி பொறித்துள்ளேன்.]

மோசஸுக்கு எதேச்சையாகத் தான் அந்த யோசனை தோன்றியது.  ஊழியத்திற்குப் போக முடியாமல் பணியின் அழுத்தம்.  வாக் இன் இண்டர்வ்யூ என்று ஏதாவதொரு நகரத்திற்கோ, சிற்றூருக்கோ வாராவாரம் அலைச்சல்.  திங்கட்கிழமை காலை தவறாமல் பாஸ்டர் கூப்பிட்டு விடுவார்.  பிளாக் செய்யலாமா என்று கூட யோசித்திருக்கிறான்.  உடனே எடுக்காவிட்டாலும், மரியாதைக்காக பின்னர் கூப்பிட்டுவிடுவான்.  ஒரு திங்கட்கிழமை தவறு செய்ய சிறு வாய்ப்பை பாஸ்டர் கொடுத்தார்.

இண்டர்வ்யூ முடிந்து ஆஃபர் லெட்டர் தயாரிக்கும் பணியில் இருந்த போது பாஸ்டரின் அழைப்பு வந்தது.

"நீங்க வேலை விஷயமா ஊர் ஊரா அலையுறீங்க.  எத்தனை பேரை சந்திப்பீங்க! அதுல ஒருத்தர் கிட்ட கூட நீங்க கர்த்தர் பற்றி கூட பேசியிருக்க மாட்டீங்களா என்ன?  உங்களோட நம்பிக்கை பற்றி எனக்குத் தெரியும்.  பேசியிருந்தீங்கன்னா அவங்க பெயர், விவரங்களை அனுப்புங்க. நம்ம காங்கரகஷன்ல எண்ணிக்கை குறைவா இருக்குல்ல.."

"கட்டாயம் அனுப்புறேன் பாஸ்டர். உங்களை நேரே சந்திக்கும்போது இதப் பத்தி பேசலாம்னு" என்று இழுத்தான்.

"அது நிச்சயம் பேசலாம். இப்போதைக்கு விவரங்களை அனுப்புங்க..." அலுப்புடன் பாஸ்டர் உரையாடலை முடித்துக் கொண்டார்.  லேசாக குற்ற உணர்ச்சி இருந்தது. 

வந்திருந்த விண்ணப்பங்களைப் பார்த்தான்.

நெற்றியில் பொட்டோ, தலையில் பூவோ இல்லாத அந்தப் பெண்ணின் போட்டோவைப் பார்த்த போது தான் அந்த யோசனை தோன்றியது.  பெண்ணின் முகவரி தான் வசிக்கும் பகுதியில் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு, ஹிந்து பெயராக இருந்த அந்தப் பெண்ணின் பெயரையும் முகவரியையும் எடுத்து வாட்ஸப்பில் பாஸ்டருக்கு அனுப்பினான்.  

வாராவாரம் சில ஆண்கள், பெண்களின் விவரங்களை அனுப்பி வைத்தான்.  புகைப்படத்தைக் கொடுக்க வேண்டியிருந்தால் இருக்கட்டும் என்று பூ, பொட்டில்லாத பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்தான்.  முதல் கட்ட விசாரணையிலேயே அவன் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. மனித வளத்துறையில் இருந்ததால், அவர்களின் குடும்பப் பின்னணி ஓரளவுக்குத் தெரிந்திருந்தது.  அதை வைத்து கொஞ்சம் கற்பனை சேர்த்து, பாஸ்டருக்குத் தெரிவித்தான்.

கிறிஸ்மஸ் காலத்தில் பாஸ்டரை நேரே சந்திப்பதைத் தவிர்க்க முடியவில்லை.  அவனைப் பாராட்டி தனது அறைக்கு அழைத்து "உங்கள் சேவைக்கு நமது சர்ச்சிலிருந்து ஒரு சிறு பாராட்டு" என்று ஒரு கவரைக் கொடுத்தார்.  அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது.

இப்போது மோசஸுக்கு அடுத்த கட்ட யோசனை தோன்றியது.  அடுத்த வாரம் பாஸ்டரை சந்தித்த போது,  ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, "... அந்தப் பெண் கிட்ட தசம பாகம் பத்தி சொன்னபோது, தன்னிச்சையா தன்னோட சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்திச்சு.  பாப்டிஸம் கூட பண்ணல.. கர்த்தரோட கருணை அவங்கள அப்படி மாத்தியிருக்கு."

அடுத்த சில மாதங்களில், பாஸ்டர் ஞானஸ்னானத்தைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.   மோசஸின் ஊழியத்தால் அவர் தனது டார்கெட்டை அடைந்திருந்தார்.  அவருக்கு மேலிடத்திலிருந்து வர வேண்டியவை தடையின்றி வந்து கொண்டிருந்தது.  மனிதர் ஒரு சுற்று பருத்தது போல இருந்தார்.

மோசஸுக்கு தான் செய்வது குற்றமாகத் தோன்றினாலும், அவ்வப்போது "நான் யாருக்கும் கெடுதல் நினைக்கலையே", "லவ் ஜிஹாத், காசுக்காக மதம் மாத்தறதுன்னு மனிதர்கள் இருக்கும் காலத்தில், நான் யாரையும் தவறான வழியில் மதம் மாற்றவில்லையே...நான் செய்வது தப்பே இல்லை" என்று சமாதானப்படுத்திக் கொள்வான்.

ஆறு மாதத்தில் மோசஸுக்கு மூன்று லட்ச ரூபாய் கிடைத்திருந்தது.  முப்பதாயிரம் வரை மற்றவர்களின் தசமபாகமாகக் கொடுத்திருந்தான்.  இந்த விளையாட்டு இத்துடன் போதும் என்று முடிவு செய்து கொண்டான்.  பங்களுரில் வேறொரு பன்னாட்டு கம்ப்யூட்டர் கம்பெனியில் வாய்ப்பு கிடைத்த போது, தயங்காமல் ஒப்புக் கொண்டான்.

மோசஸிடமிருந்து அவனுடைய தொடர்புகளிடமிருந்து வர வேண்டிய தசம பாகம் நின்றது பாஸ்டரை குழப்பத்தில் ஆழ்த்தியது.  ஊழியத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களிடம் மோசஸ் கொடுத்த புதிய கிறிஸ்துவர்களின் முகவரிகளைப் பிரித்துக் கொடுத்து, விசாரிக்க அனுப்பினார்.

அடையார் ஆரக்ஷணியும், அண்ணா நகர் அஸ்விதாவும், திருவான்மியூர் அவந்திகாவும் முன்பின் தெரியாத பெந்தகொஸ்தெ மனிதர்களுக்கு எப்படி அவர்களுடைய முகவரி கிடைத்தது என்று குழம்பிக் கொண்டிருந்தனர். 


Monday, May 06, 2024

The ticking bomb of class divide

[This was in my draft for months. Recently, I began translating Dharampal's Rediscovering India into Tamil.  It triggered me to take up this draft, complete and publish it.]

A few years ago, we had a school reunion. When in school, we had students from primarily middle-class families.  But there were a few rich kids and a few poor kids.  There was a student from a leading doctor's family, one from a wealthy landlord's family, and so on.  And there were also students from families that earned their daily bread from watch repairs, small-time trading, teaching, etc.  It was a good mix of many communities with a simple pure friendship that continues for decades. It helped in at least knowing about the other communities and classes.  In later years, this friendship helped in helping each other. 

Decades ago, when private vehicles didn't dominate our roads, most of us used to travel by public transportation.  That is another opportunity to know about the other.  In most cases, it doesn't translate into clear action of empathy or cooperation, but the awareness about various groups of people as possible.

Cynically speaking, those situations provided at least an environment of non-hostility towards the other classes and communities.

The divide that is running deep and long

Education

About three decades later, schools started inheriting the classes based on the students.  Even within a suburb, schools were getting branded as belonging to a community or class of people.  Unofficially some schools expect the parents to own a certain class of car - anything below that might result in the rejection of admission.  The reason was that the child shouldn't feel that he belongs to a lower rung in the class hierarchy.

Quality private education at the school level is for the rich;  But at the higher education level, quality is driven by the bright students admitted by the institutes.  That is, bright students who could afford quality school education.  If a poor student from a rural background could make it to the institute and manage to complete the course, it is considered to be heroic.

Transportation

A colleague's car needed some repairs and she had to travel by bus.  The exact statement she made was "I am mortally scared to travel by bus."  We all know that city buses in Chennai aren't great but there's nothing to be mortally scared of except when one is right in front of a speeding bus.  But it indicated the divide.  Private vehicles are reducing contact with other parts of society.

Our roads and intersections are designed for private vehicle users - not pedestrians or cyclists.   Crossing the roads has become a nightmare for pedestrians in all our cities.  As a small act of kindness to them, foot overbridges were provided in cities like Chennai.  Using them is equal to climbing two or three floors.  Most such overbridges do not have lifts.   In effect, these overbridges remain unused in most places.

Look at the health of public transportation.  Except for a few cities that boast of metros, the entire country has a terrible public transport system.  It is as if the common man does not deserve anything better.  One of the few prides of India - the Indian Railways continues to innovate only for the elite.  Why can't the average Indian travel by second class with at least a seat wide enough for him?  He is no more the impoverished poor man of the British and socialist times.

The class divide also gave rise to liberals and corrupt politicians who had no clue about the common man but wanted to fight for other causes.  An example was the protests for the metro shed in Aarey colony in Mumbai citing environmental issues.  Kids like Aditya Thackeray who belongs to the elite class are on the side of the protestors.  The project got delayed and Mumbai's suburban train infrastructure continued to be stretched with its non-elite crowd.  Chennai saw a sudden shifting of the Chennai bus terminus to outside of Chennai.  The common man has to spend a fortune to get to that terminus. 

Many states began seeing "an act of kindness" by which women got free rides in select buses.  When buses are too few and the service is deteriorating every day, what is the need for such patronizing acts?  Wouldn't it be better with better quality buses and service at an affordable charge?  The idea for such a dole comes from the absence of a connection with the common man.

Other Divides

A recent addition that contributes to the class divide is the 'Gated Communities'.  Their concept is as if the teaming masses living outside of a gated community are like the Kalakeyas of Bahubali.  There are multi-layered security comparable to nuclear facilities and defense enclaves.  A commoner living outside but walking into such 'Gated Communities' must be a lowly staff - never an equal friend of a resident.

Government's Role

The absence of quality schools for all and quality transportation for all prevents the communities and classes from coming together.  It is only that governments can provide them, but successive central and state governments messed up with education and transportation in the interest of the "economy".

Is this class divide unhealthy?  I think it is very unhealthy.

Why is it unhealthy?

The divide is not based on occupation like ancient India or even rural India.  In rural India, families associated with a profession lived as a community.  There were streets of Farmers, Potters, Brahmins and so on.  There might be differences in the wealth of people within a community, but the differences in the wealth across the communities weren't significant.  They were differences not divides.  Progress on the economic front was dependent on intelligence, hard work, honesty, and a bit of luck.  The community could help out a poor member in his progress.  With urbanization, the comfort of a community supporting a family when it is in need will be reduced.  

While there is a sustained campaign against castes and caste differences, class differences are getting wider.  Investments will be there for the innovations for the upwardly mobile, while fewer innovations for the rural and poor will find little support.

The probability for a poor person to escape poverty will be even more difficult.  India may not see the kind of revolutions Russia or China saw, but there would be numerous small-scale conflicts.  Some of the law and problems in the cities are the symptoms of such conflicts.

That is not the path Bharath should be forced to take.


Sunday, May 05, 2024

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

சில வரலாறு தொடர்பான புத்தகங்களை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தது. அதின் மூலம் வெகுஜனங்களைக் குறி வைத்து எழுதப்படும் வரலாறு பற்றி புரிந்தது.

வரலாறும் பிற ஆராய்ச்சித் துறைகளைப் போல வறண்டதே. அசாத்திய பொறுமையும் ஊகிக்கும் திறனும் இருந்தால் வரலாற்றை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.   அதை வெகுஜனங்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும் அதற்காக அடிப்படைகளில் கை வைக்கக் கூடாது.  வரலாற்றுக் கட்டுரையை தினத்தந்தி தலைப்பு போல எழுதுவது ஆராய்ச்சிக்கு இழைக்கப்படும் அநீதி.  

பொது மக்கள் வரலாற்றை மறந்து விடக்கூடாது என்பதற்காக இலக்கியங்கள் பயன்பட்டன.  அவை வரலாற்றை சுவாரஸியமாக்கின. உதாரணத்திற்கு நமது இதிகாசங்கள்.  வெவ்வேறு காலகட்டத்தில் அவற்றில் உப கதைகள் சேர்க்கப்பட்டு, பல்வேறு கால சரித்திரங்கள் அவற்றில் மறைந்துள்ளன.  

மகாபாரதப் போரில் பாண்டியர்கள் பங்கு பெற்றனர் என்பது உண்மையா, பொய்யா என்று தெரியாது.  ஆனால், மகாபாரதம் எழுதப்பட்ட போது, பாண்டியர்கள் தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்தினர்;  அவர்கள் வட நாட்டிலும் புகழ் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது.   இதற்கு மற்றொரு உதாரணம் - அக நானூறிலும் புற நானூறிலும் 'மோரியர்' என்று மௌரியர்களைக் குறிப்பிடும் பாடல்கள் உள்ளன.  இவற்றைக் கொண்டு புற நானூறு எழுதப்பட்ட காலம் மௌரியர் காலம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.  மௌரியர்களின் புகழ் நாடெங்கும் வீச அது இலக்கியத்திலும் இடம் பெற்றது.

வரலாற்றுப் பின்னணியில் எழுதப்படும் கதைகளையும் நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.  பொன்னியின் செல்வன் வரலாறு அல்ல.  வரலாற்றின் மீது ஈடுபாடு வரவழைக்கும் ஒரு சுவாரஸியமான (?) மர்மக் கதை. அவ்வளவு தான்.  கதைகளையும் வரலாற்றையும் குழப்பிக் கொள்வதால் பெரும் அனர்த்தம் நிகழ வாய்ப்புள்ளது.  உதாரணத்திற்கு:

செப்பேடு ஒன்றில் ஆதித்த கரிகாலன் இளம் வயதில் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.  அவன் கொல்லப்பட்டதாகவோ, தற்கொலை செய்து கொண்டதாகவோ, பாம்பு கடித்து இறந்ததாகவோ எதுவும் கூறப்படவில்லை.  மற்றொரு தரவில், ஆதித்த கரிகாலன் மரணத்தில் கொலையில் சம்பந்தப்பட்டதாக நான்கு பிராமணர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்ற தகவல் கிடைக்கிறது.  கிடைத்துள்ள தகவல்கள் இவை மட்டுமே.  இவை உண்மையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது.  செப்பேடுகள் பெஸ்ட் செல்லர்ஸாக போட்டி போட்ட காலம் இருந்ததாக நமக்குத் தகவல்கள் இல்லை.

வரலாற்று ஆய்வாளவர் நீலகண்ட சாஸ்திரி, ஆதித்த கரிகாலன் இறப்பில் உத்தம சோழனுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற ஒரு ஊகத்தை மட்டும் முன்வைக்கிறார்.   (பார்க்க - உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை - பொங்கு தமிழ் - கருத்துக்களம் (yarl.com))

இதைப் படித்த முதல் வெகுஜன வரலாற்று ஆசிரியர் - ஆதித்த கரிகாலனை, உத்தம சோழன் சூழ்ச்சி செய்து கொன்றான் என எழுதுவார்.  சுவாரஸியம் தேவை பாருங்கள்!  இரண்டாவது வெவாஆ - உத்தம சோழனுக்கும் இராஜராஜ சோழனுக்கும் ஒரு ரகசிய உடன்பாடு இருந்ததோ என்ற சந்தேகத்தை முன்வைப்பார்.  மூன்றாவது வெவாஆ - இந்த உடன்பாடு இருந்தது என்ற தொனியில் எழுதுவார்.  (இப்படிப்பட்ட வரலாறு ஏற்கனவே எழுதப்பட்டு புத்தகமாக வந்து விட்டது.)  தமிழ் சினிமா பாதிப்பில், நான்காவது வெவாஆ - ஆதித்த கரிகாலனும் இராஜராஜனும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்களல்ல என்று எழுதுவார். ஐந்தாவது வெவாஆ - ஆதித்த கரிகாலனின் தாய் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்று எழுதுவார்.  அவரவர் வசதிக்குத் தானே வரலாறு.  பேரார்வம் மிக்க இளைய தலைமுறை திரைப்பட இயக்குனர் இதை இரு ஜாதிகளுக்கு இடையே நடந்த போர் என்று படமெடுப்பார்.  வரலாற்றுக்கு வீடு பேறு கிடைத்திருக்கும்.

வெகு ஜனங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் வரலாறு ஆர்வலர்களுக்கு குறைந்த பட்சம் தரவுகளையும் ஊகங்களையும் பிரித்துக் கூறும் வழக்கம் வேண்டும்.  வரலாறு என்ற பெயரில் கதை சொல்வது வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம்.