கசடதபற

 சிறிய வாசகர் வட்டத்தைக் கொண்ட ஒரு மாதாந்திரப் பத்திரிகையைப் படித்து வந்த பலர், அதன் சில பிரதிகளை, கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்குப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்துள்ளனர். அப்படி சேர்த்து வைத்த பலரிமிருந்து அவற்றை சேகரித்து, ஸ்கேன் செய்து, OCR செய்து, பிழை திருத்தி, தொகுத்து அச்சிட்டுள்ளார் விமலாதித்த மாமல்லன்.  அத்துடன் ஸ்கேன் செய்த பக்கங்களை ஆர்க்கைவ் தளத்தில் பதிவேற்றியுள்ளார். 

Cengage என்ற நிறுவனம் சில நூற்றாண்டு பழைய பத்திரிகைகள், பிற ஆவணங்களை டிஜிட்டல் செய்து அவற்றை நூலகங்களில் தகவல் விற்பனைப் பொருட்களாக விற்கிறது. அதற்காக மூல ஆவணங்களை ஸ்கேன் செய்து, எழுத்துக்களைக் கண்டுபிடித்து , பிழை திருத்தி, அவற்றைத் தேடத்தக்க வகையில் சொல்வடிவில் கொண்டு வரவேண்டும். விமாவின் உழைப்பு அதற்கு சற்றும் குறைந்ததல்ல. Cengage வணிக நிறுவனம். அதனிடம் முதல், வேலை செய்ய ஆட்கள், கருவிகள் என்று பல வசதிகள் இருக்கும். அவற்றுடன், சந்தைப்படுத்த ஆட்களும் தொடர்புகளும் கூட உண்டு. 

தனி மனிதனாக, இவை அனைத்தையும் செய்த அவரது உழைப்பு அசாத்தியமானது. ஐந்து வருட உழைப்பு என்கிறார். ஐந்து வருடங்கள் ஒரு குறிக்கோளுக்காகப் பலனை எதிர்பாராமல் செய்த கர்ம யோகம்!

எத்தனையோ பெரியவர்கள், சிக்கலான சிந்தனைகளையும் வாதங்களையும் தெளிந்த மொழியில் எழுதியுள்ளதைப் படிக்கும்போது, இந்தத் தொகுப்பை ஏன் பலர் பொக்கிஷமாகக் கருதினர் என்று புரிகிறது.  

நன்றி மாமல்லன்.

Comments

Popular posts from this blog

Deepak Amin's article that inspired many to return to India

What does lineage stand for?

Blogging about blogging